கொரானா நெருக்கடி,உதவிய ஈழதமிழ் வர்த்தகருக்கு நன்றி தெரிவித்து விழா எடுத்த பிரித்தானியர்கள்..

181

கொரோனாவால் லக்டவுண் போடப்பட்ட காலப்பகுதியில் லண்டனில் உள்ள மக்கள் அனைவருமே எதோ ஒரு வகையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் பிரித்தானியா Liverpool Chester என்ற இடத்தில் penley stores, penley, wrexhamஅமைந்துள்ள றஜீவன்,அருமருந்து உரிமையாளரான ஈழத்தமிழர் ,அந்த இடத்து மக்களுக்காக தனது கடையில் உள்ள பொருள்களின் விலையை குறைத்து கொடுத்து சேவை மனப்பான்மையுடன் நல்ல மனதுடனும் செயற்பட்டதால் இக் கடை உரிமையாளரை அவ் இடத்து மக்கள் அனைவரும் சேர்ந்து விழா எடுத்து பெருமைப்படுத்தியுள்ளனர்.அவர்களுடன் நாமும் இவ் ஈழத்தமிழனை வாழ்த்துகின்றோம். நாம் செய்யும் நல்லது எமக்கு வட்டியுடன் சேர்ந்து வருகின்றது.ஆயிரம் வியாபார வியாக்கினங்கள் கதைக்கலாம்,ஆனால் காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் மான பெரிது.இவரோ போன்றவர்கள் தாமும் நன்றாக இருந்து அடுத்தவர்களையும் நன்றாக இருக்க வைப்பவர்கள்.இவரை போன்றவர்களே சமூகத்துக்கு அதிகம் தேவை.இவர் தான் சார்ந்த சமூகம் எதிர்கொள்ளும் இடர்களின் போது தேவையான மனோபலத்தை தன்னிடமிருந்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கின்றார்.விலையை கூட்டி விற்று வியாபார வியாக்கினங்கள் பேசுபவர்களை தாண்டி இவர்கள் போன்றவர்களின் வியாபாரம் செழிக்க வாழ்த்துவோம்.

அவ் நிகழ்வின் பதிவுகள் படங்களாகவும் வீடியோ இணைப்பாகவும் உள்ளது.