இராமன்,இராவணன்,தடுப்பூசி

103

தடுப்பூசி தொடர்பாக பார்ப்போம். இராமன் மற்றும் இராவணன் என்ற இருவரில், இராமனுக்கு நோயை கண்டால் பயம். இராவணனுக்கு தடுப்பூசியை கண்டால் பயம். இருவரின் பயத்திற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. இப்பொழுது தடுப்பூசி போடப்படாத இராவணனால், தடுப்பூசி போட்டுக்கொண்ட இராமனுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா? அப்படி பாதிப்பு உண்டாகும் என்றால் இராமன் ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்டான்? இதற்கு யாராவது சரியான பதில் கொடுக்க இயலுமா?

சிலர் கூறலாம், இராவணனால் இராமனுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தடுப்பூசி போடாத மற்றவர்களுக்கு இராவணன் நோயை பரப்பிவிடுவான் அல்லவா என்று. தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசிக்கு அஞ்சுவதால், நோய் வந்தாலும் பரவாயில்லை என்ற முடிவு எடுத்தவர்கள் தானே. ஏன் அனைவரும் நோய்க்கு மட்டும்தான் அஞ்சவேண்டும் என்ற கட்டாயம் இருக்கின்றதா என்ன? அதனால் இதுவும் பிரச்சனை இல்லை.

மீண்டும் சிலர் கூறலாம், உங்களுடைய விருப்பத்தை மீறி, உங்களை பாதுகாப்பது உலக ஆட்சியாளர்களின் கடமை, அதனால் தடுப்பூசி கட்டாயப்படுத்தப்படுவதில் தவறு இல்லை என்று. அப்படி என்றால், வருடத்திற்கு உலகத்தில் 28 லட்சம் பேர் இறக்கும் புகைப்பிடித்தல் தொடர்பான புற்றுநோய்க்காக ஏன் புகைப்பிடித்தலை தடை செய்யவில்லை? அங்கு மட்டும் ஏன் தீங்கு என்றாலும், மக்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள்? “தடுப்பூசி போடமாட்டோம்” என்ற மக்களின் விருப்பத்தை மீறி, தடுப்பூசியை கட்டாயப்படுத்த முயல்பவர்கள். “புகை பிடிப்பது பிடிக்கும்” என்ற மக்களின் விருப்பத்தை மீறி, ஏன் புகைப்பிடித்தலை தடை செய்யவில்லை?

அப்படி கட்டாயப்படுத்தும் அளவிற்கு அந்த தடுப்பூசிக்குள் என்னதான் உள்ளது? அப்படி என்ன மக்களின் மீது இவ்வளவு அக்கறை? மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்களை தீவிரவாதத்தில் இருந்து காப்பாற்றுகின்றோம் என்று அக்கறைப்பட்டு போருக்கு சென்ற உலக ஆட்சியாளர்கள், இறுதியில் லட்சக்கணக்கான அங்குவாழ் மக்களை கொன்று. அந்த நாடுகளை நாசம் செய்தது தான் இறுதியில் நடந்தது. நமது நாட்டு மாடுகளின் மீது அக்கறை பட்ட பீட்டா, ஜல்லிக்கட்டை தடை செய்து. அப்படி ஜல்லிக்கட்டை தடைசெய்வதன் மூலம், நாட்டு காளைமாடுகளை வைத்திருக்கும் தேவையை நீக்கி. நாட்டு மாடு இனத்தையே அழிக்க முற்பட்டது. அப்படியென்றால், கட்டாய தடுப்பூசி பின் இருக்கும் அக்கறை எப்படிப்பட்ட அக்கறை?

நமது உரிமைகள் பிறருக்கு பாதிப்பினை உண்டாக்கினால் மட்டுமே, அவற்றை நாம் விட்டுக்கொடுக்கலாம். அப்படி பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, நமது உரிமைகளை ஒருவன் பறிக்க முற்பட்டால், அதுதான் அடக்குமுறை. நல்லதோ கெட்டதோ, எதுவாக இருக்கட்டும் விருப்பத்தை மீறி நடக்கும் அனைத்தும் அடக்குமுறையே!

எனக்கு பிடித்த ஒரு வாக்கியம் உண்டு “ஒருவன் நம்மை ஒரு முறை ஏமாற்றினால், அது நம்மை ஏமாற்றியவனுக்கு அசிங்கம். இதே பலமுறை ஏமாற்றினால், அது நமக்கு தான் அசிங்கம்.”

நன்றி – Saravana