வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் விடுதலைப் புலிகளே – ரம்புக்வெல

197

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது ஏற்புடைய ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் மனிதாபிமான ரீதியில் காணாமல்போன விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதாகவும் ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமற்போனோர் குறித்து தேட அரசாங்கம் தயாராக இருந்தாலும் அவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களாக இருப்பின் அவர்களுக்கான இழப்பீடு தொடர்பில் இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.சாதாரண மக்களாக இருப்பின் இழப்பீடு வழங்கலாம் என்றும் அதுபோன்ல் காணாமல்போன இராணுவத்தினர்களுக்காகவும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

காணாமல்போனதாகக் கூறப்படுவோர் இறந்திருக்கலாம் என்று தங்கள் எண்ணுவதாக குறிப்பிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவர்கள் உயிருடன் இல்லை என்றே கருதுவதாக குறிப்பிட்டார்.இருப்பினும் அதனை உறுதியாகக் கூற முன்னர் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக காணாமல்போனோர் எனக் கூறப்படுவோறில் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றும் அது தொடர்பாக பரந்துபட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிங்கள இனவாத அரசு,போரில் இறந்த ஆயிரகணக்கான படைவீரர்களின் உடல்களையே ஏற்காமல்,திருப்பி அனுப்பி,அவர்கள் இராணுவ மரியாதையுடன் புலிகளால் அடக்கம் செய்யப்பட்ட பல சம்பவங்கள் வரலாற்றில் உண்டு,தம்மினத்தை ஏமாற்றி பிழைக்கும் இவர்கள் தமிழினத்துக்கு நீதி தருவார்கள் என்று எதிர்பார்பது மிகுந்த முட்டாள்தனமாகவே முடியும்.எதிர்பார்ப்புகளை தவிர்க்கும் போது அதனால் வர இருக்கும் ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம்.எதிரிகள் சிங்களவர்கள் சரியாக இருக்கிறார்கள்,அவர்கள் தமிழர்களை எல்லோரையும் சேர்த்து புலிகளாக பாக்கிறார்கள்.ஆனால் தமிழர்? நான் பெரிது நீ பெரிது என்று வாழ்ந்தமையினால் இன்று நாடு இல்லாமல் உலகம் முழுதும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.இனியாவது திருந்துவார்கள் என்றால்,அதுவும் இல்லை.

Tamil Nation