சஜித்துக்கு கை கொடுத்தாரா ரணில்?

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த கோரிக்கைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரிடம் இருந்து சிறந்த பதில் கிடைத்துள்ளது.

கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரதேசவுக்கு வழங்கும் கௌரவமாக கருதி கட்சியில் இருந்து சஜித்தை நீக்குவதனை தாமதப்பபடுத்த ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தீர்மானித்துள்ளார்.

எப்படியிருப்பினும் லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க, ரஞ்ஜித் மத்துமபண்டார, கபீர் ஹாசிம் தொடர்பில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது