ஐ.தே.கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகின்றார் ரணில் விக்கிரமசிங்கே!

154

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவம்ச தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைப் பதவிக்கு ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் தமது பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை 10.30 மணி அளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் செயற்குழு கூட்டம் ஆரம்பமானது .அக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அகிலவிராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, தயா கமகே, ஜோன் அமரதுங்க, அர்ஜுன ரணதுங்க, பாலித தெவரப்பெரும உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.