மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலைக்கு நேர்ந்த கதி!

383

மாமனிதர் ந.ரவிராஜின் உருவச்சிலை கை,கால்கள் கட்டப்பட்டுள்ளது. முகம் கறுப்பு துணி கொண்டு மூடப்பட்டுள்ளது.நேற்று இரவு சசிகலா ரவிராஜ் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் வெளிப்பாடாக இது இருக்கலாம் என கருதப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கையில் வென்ற சசிகலா ரவிராஜ்,பின்னர் நியாயமற்ற முறையில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டதுடன்,தோல்வியடைந்திருந்த சுமந்திரன்,அவர் இடத்துக்கு வந்திருந்தமையும்,அதற்கு பின்னர் ஏற்பட்ட முறுகலில்,மக்களை விசேட அதிரடி படை தாக்கியதும் குறிப்பிடதக்கது. .