“றோ”வும் பொட்டு அம்மானும்.

136

இந்திய உளவுத்துறை நிறுவனமான “றோ” அமைப்பு ( RAW) உருவாக்கப்பட்ட தினம் இன்று ஆகும்.(18.09.1968)

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக இந்திய உளவுத் துறை (இன்டெலிஜென்ஸ் பீரோ) 1933-ல் உருவாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்தியா விடுதலை அடைந்த பின்னர் 1968-ல் உளவுத் துறையின் ஓர் அங்கமாக, வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவான “றோ” இந்திரா காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட், 250 பணியாளர்கள் என தொடங்கப்பட்ட “றோ”வின் இன்றைய ஆண்டு பட்ஜெட் சுமார் 900 கோடி ரூபாய்.

அதிகாரபூர்வமாக மட்டுமே 25,000 பேர் வேலைபார்க்கிறார்கள். இவர்களில் 3,500 பேர் அந்நிய மண்ணில் பணியாற்றும் கள உளவாளிகள்.

இது போல் அதிகாரபூர்வமாக இல்லாமல் ஏஜென்டுகளாக எத்தனையோ பேர் வேலை செய்கிறார்கள்.

அமெரிக்காவின் சிஐஏ மற்றும் இஸ்ரவேலின் மொசாட்டுக்கு இணையாக தற்போது றோவும் உள்ளது என்கிறார்கள்.

ஆனால் 2009வரை புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொல்வதற்கும் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கும் இந்த றோ எடுத்த முயற்சிகள் அனைத்தையும் முறியடித்தவர் பொட்டு அம்மான்.

பொட்டு அம்மான் எந்த புலனாய்வு கல்லூரியிலும் படிக்கவில்லை. உலகின் பிரபல்யமான உளவு நிறுவனங்களில் பயிற்சி பெறவும் இல்லை. ஆனாலும் அவர் றோ வின் சதிகளை எப்படி முறியடித்தார் என்பது இன்று வரையும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

அதுவும் எந்தவித நவீன உபகரணங்களும் இன்றி போதிய வளங்களும் இன்றி ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருந்துகொண்டு றோவை முறியடிப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத விடயம்.

கியூப தலைவர் பிடல் காஸ்ரோவை அமெரிக்க சிஐஏ பல தடவைகள் கொல்ல முயன்று தோல்வி அடைந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

அதேபோல் பொட்டு அம்மானின் சாதனை வரலாற்றில் இடம் பெறுமா என்று தெரியவில்லை.

ஆனால் றோவின் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் பொட்டு அம்மானின் பெயர் தமிழர்களின் மனங்களில் நிச்சயம் வந்து போகும்.