தேர்தல் காலம்,உறுதிகள் அள்ளி வீசப்படுகின்றது போகின்ற போக்கில்,மைய வாத முதியோர் கூட்டம் பரம்பரை பரம்பரையாக தங்கள் கட்சி என்று கடலை போட்டு கொண்டிருக்க..தங்களுக்குள் ஒற்றுமையில்லாத இவர்கள்,மக்களை தங்கள் பின்னால் ஒற்றுமையாக அணிதிரளுமாறு கூறுவது,அவர்களின் தனிதனி நலன்களுக்கானது என்பது வெளிப்படை,இனி வரும் ஐந்தாண்டுகளுக்காக அவர்கள் மனதில் இருப்பவற்றில் முதன்மையானது.தேர்தலில் வெற்றிமட்டுமே,மீதியை பின்னர் பார்த்துக்கலாம் என்ற அலட்சியமே தமிழர்களின் அரசியல் துன்பங்கள் அடிப்படை காரணமாக நிற்கின்றது.
ஆனால் இவர்கள் அது எதையும் தம் மனதில் வைத்துகொள்ளவதாக இல்லை,மக்களை எப்படியாவது ஏமாற்றி எதாவது சொல்லி தேர்தலில் வாக்குகளை அள்ளுவதே இவர்களின் மனதில் உள்ள திட்டமாகும்.முப்பது வருட கொடிய அதர்ம போரில் உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டு உடைமைகளை உறவுகளை இழந்து நிர்கதியாக நிற்க,இவர்கள் அவ்மக்களை காட்டி இனபடுகொலை அரசில் தமக்கும் தம் குடும்பங்களுக்கும் சலுகைகள் பெற்று ஏகபோக வாழ்க்கை வாழ்வதுடன்,அதை தக்க வைப்பதற்கு தொடர்ந்து மக்களை ஏமாற்றி கொண்டுள்ளனர்.
மக்களும் தெரிந்தும் தெரியாமலும் இவர்களே தெரிவென்றும்,கிடைப்பது கிடைக்கட்டும் என்ற போக்கில் வாழ பழகிகொண்டுள்ளனர்.எனவே அன்றாட வாழ்வுக்கே அல்லல்படும் பெரும்பான்மை நடுத்தர மக்களை இவ்வாறு பழகிகொள்வதன் மூலம் அரசியல்வாதிகளை தங்களை சரியென்று நிருபித்து கொள்கின்றனர்.தவிர தங்கள் பின்னாள் வரும் அடுத்தடுத்த இரு தலைமுறை அரசியல்வாதிகளையும் இவ்வாறே கெடுத்து வைத்துள்ளனர்.இவர்கள் உள்ளூராட்சி சபைகள் தொடக்கம் பிரேதச சபைகள் வரை நடக்கும் ஊழல்கள் இதற்கு சாட்சி..ஒரு காலத்தில் தமிழகத்தில் நடக்கும் ஊழல்களை பார்த்து கேவலமாக கைகொட்டி சிரித்தோம்.இன்று நம்மவர்கள் தாம் அதற்கும் மேல் என்று நிருபித்துள்ளனர்.நாம் இன்னும் பார்ப்பதற்கு நிறைய இருக்கின்றது.
இத்தலைவர்கள் என்று சொல்லப்படுகின்றன அரசியல் பண்ணையாளர்கள்,தமிழர்களை விலங்குகளாக நடத்தி இலாபம் ஈட்டுகின்றனர்.தங்களுக்கு எதாவது பிரச்சினை அச்சுற்றுத்தல் என்றால் சிங்கள அரசு பின்னால் ஒளித்து கொள்வார்கள்.கேட்டால் தமிழர்களாக போராடுகிறார்கள் என்பார்கள்.தமிழினத்தை மிகபெரும் பண்பாட்டு அரசியல் அழிவு ஒன்றை நோக்கி கொண்டு செல்கின்றனர்.இவர்கள் முதலில் இதைதான் செய்தார்கள்,பிரச்சினைகள் முற்றி வெடிக்கும் போது இவர்கள் காணாமல் போய்விடுவதுடன்,பின்னர் அரச பாதுகாப்புடனேயே சமாதானம் பேச வருவார்கள்.தமிழர் சமூக அரசியல் முறுகல்கள் அதிகமாக கொண்டு போகும் வேளை இவர்கள் பதவி ஆசை,பண வெறி,கமிசன் காசு என்று அலைகிறார்கள்,தமிழினம் உள்ளுக்குள் பெருநீறுபூத்த நெருப்பாக ஒரு பெருவெடிப்பு ஒன்று நிகழும் போது,தமிழினம் தங்களுக்குள்ளயே ஒரு மிகப்பெரிய இனசுத்திகரிப்பு ஒன்றை சந்திக்க போகும் காலம் விரைவில் இல்லை.
காலம்காலமாக தமிழர்கள் துரோகத்தினாலேயே வீழ்த்தப்படுகின்றார்கள்,எத்தனை பாடங்கள் படித்து கொண்டாலும்,துரோகமும் துளிர்விட்டு கொண்டுதான் உள்ளது.எனவே தமிழின சுத்திகரிப்பு ஒன்றே முதலில் தேவையானது.தமிழர்களினுள் தேவையில்லாத கும்பல்கள் காலகாலமாக உருவாகி கொழுத்து வருகின்றனர்.இவர்களே அரசியல் பன்றிகளை வளர்தெடுத்துகின்றனர்.இந்த சமூக அமைப்பை ஒழித்துகட்டாமல் தமிழினம் வரலாற்றில் நகரமுடியாது.மாற்றம் உங்கள் ஒவ்வொருவரில் இருந்தும் தொடங்கட்டும்.சிறுது சிறிதாக இப்ப இருந்தே மாறிகொள்வதே நல்லது,அல்லாமல் விடும் போதே திடிரென்று வெடிக்கும் புரட்சிகளினால் அத்தனை சிறு மாற்றங்களும் ஒன்று சேர்ந்து ஒரே நாளில் புரட்டி போடுகின்றது.எனவே இப்ப இருக்கும் தற்காலிக சுகத்தை நம்பி அரசியலை தவிர்க்காமல்,ஒவ்வொருத்தரும் அரசியலில் இறங்குங்கள்.இல்லையெனில்…
மீண்டும் ஒரு போர் முன்பை விட பலநூறு மடங்காக..
மாற்று ஆயுத குழுக்கள் தோற்றம்,அழித்தொழிப்பு,
துரோகிகளுக்கான கொடூர தண்டனைகள்
குண்டு வெடிப்புகள்,அகதி வாழ்க்கைகள் என இவற்றுக்கு உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்,எவ்வளவுதா நுணுக்கமாக மீண்டும் போராடினாலும்,தலையில் மண்ணள்ளி போட்டு மூட போறது என்னவோ சொந்த எம்மினம்தான்,அதுவும் போராடுபவர்களுக்கு பெருமைதான்..போராடின இனத்துக்காக சாக துணிந்தவர்கள் அவர்கள்..இன்று நாம் என்ன செய்கிறோம்,உலகுக்கே முன்மாதிரி என்று பீத்தி கொள்ளும் அமெரிக்காவில் கறுப்பின கொடுமை அதேயளவிலேயே இருக்கின்றது.என்ன தைரியத்தில் மண்ணை விட்டு போனோம்? அதுவும் ஒரு புறமாக ஒரு சிறு அமைப்பு உயிரை கொடுத்து போராடி கொண்டிருக்கும் போதே…அதனை பலப்படுத்தாமல்,வெளிநாடு போய்விட்டு நன்றிகடனுக்காக காசால் பலப்படுத்தலாம் என்றா?
தமிழர் மண்ணில் வன்முறைகளை விரும்பு தேர்வு செய்யப்படவில்லை,சமூக அக்கறையினாலும் வரலாறு வழிகாட்டல்களிலுமே நடைபெறுகின்றது,அது இனியும் தொடரும்..தலையும் வாலும் இல்லாத ஜனநாயகத்தை சிலர் பேசுபொருளாக்கி,நோகாமல் நுங்கு தின்ன பார்ப்பது நெடுநாள் நிலைக்காதுடன்,அது சமூகத்தை பெரும் சோம்பேறியாக்கி,அன்னத்துக்கு பதிலாக கழுகுக்கு வாக்கு போடுமளவுக்கு அறியாமை,முட்டாள்தனத்தில் ஊற வைத்துள்ளது.பெரும் பின்னடைவில் சென்று கொண்டிருக்கும் மூத்த இனம்,இவைகளை இயற்கையாக சமனிலைப்படுத்த புரட்சியை ஒரு நாள் வேண்டி நிற்கும்,அன்று மொத்தமாக இவர்கள் அழித்தொழிக்கப்படுவார்கள்.