யாழில் ஒரு மாதத்தில் மட்டும் 300+ விபத்துகள்

60

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 337 பேர் வீதி விபத்து, தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களிற்று உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் மட்டும் வீதி விபத்தில் 212 பேரும், ஏனை விபத்தில் 118 பேரும், தீவிபத்தில் 7 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழர்களின் சுயநல மனபான்மைதான் அதிகமான விபத்துக்களும் காரணம்.வீதிகளில் வரும் அடுத்தவர்கள் பற்றிய எந்தவித அக்கறை பிரக்ஞை இன்றி வீதி தங்களுக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது என்ற சுயநலமனபான்மையில் அக்கறையில்லாமல் வாகனங்களை செலுத்துவார்கள்.சிறிய நகரான யாழில் மோட்டார் சைக்கிள்களுக்கு குறைவில்லை.ரொபி வாங்கவும் ஊர் சுத்தவும் பேஷன் காட்டவுமே அதிகமாக மோட்டார் சைக்கிள் ஓடப்படுகின்றது.தமிழர்களின் சுயநல மனப்பாங்கே அவர்களுக்கு நடைபெறும் எல்லாவித அழிவுகளுக்கு முதல் காரணம்,அதை அவர்கள் மாற்றாமல் இருக்கும் வரை இந்த அழிவுகள் ஏதோ ஒரு வகையில் அவர்களை பின்தொடர்ந்து கொண்டே இருக்கும்.