ஐக்கிய நாடுகளின் சர்வதேச அலுவலகத்திற்கு தலைவரானார் ஈழத்துப்பெண்

651

ஈழத்து தமிழ் பெண்ணான திருமதி ராஜி பாற்றர்சன் அவர்களுடனான இன்றைய நோ்காணல்
30.10.2020

01.ஏன் நீங்கள் உலகத்தமிழர் வம்சாவளி அமைப்பில் இருந்து பதவி விலகுறீங்கள். நானும் அதை ஏற்கவில்லை?
புரிகிறது. ஆனால் இனப்படுகொலை நிரூபிக்கும் பணி தான் என்னுடைய முதன்மையான பணியாக இருப்பதால் அந்த முடிவை எடுக்க வேண்டி வந்தது. அதுமட்டுமல்ல நான் தற்பொழுது முற்றுமுழுதான வேற்று இனத்துக்குரிய ஒரு அமைப்பில் இருப்பதால் அதை ஒரு பாதுகாப்பாகவும் கருதுகிறேன்.
இது முழுக்க முழுக்க தமிழர் இயக்கத்தின் உடைய திட்டமிட்ட வேலை
ஆனால் அவர்களுக்காக பயந்து நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

02.எப்படி நீங்கள்இனப்படுகொலையை இனிமேல் நிரூபிக்க போகிறீங்கள்?
எங்களுக்கு உங்கள் பணி மிகவும் தேவையான ஒரு பணி?
நான் இரண்டையுமே செய்து கொண்டு வருகின்றேன். தற்பொழுது அம்பாறை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒரு வேலை திட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றோம். அதை செய்து முடிக்கும் போது கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் பயனடைவார்கள்.
தமிழ் மக்கள் இதுவரை செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்யாததால் தான் இனப்படுகொலை என்பதை நாங்கள் நிரூபிக்கவில்லை. பல வேலைத்திட்டங்களை ஐநாவில் செய்யாமல் விட்டுவிட்டு ஐ.நா. மீது நம்பிக்கை இழக்கும்படி செய்திருக்கின்றோம் அதுதான் உண்மை. ஐக்கிய நாடுகள் சபையில் தங்களை ஏகப் பிரதிநிதிகளாக காட்டிக்கொண்டு இருக்கும் தமிழ் அமைப்புகளே மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது ஒரு இனத்திற்குரிய விவகாரம்.
நான் வன்னியில் வாழ்ந்து சகல வலிகளையும் அனுபவித்து வந்தவள். நிச்சயமாக எங்களுடைய பெண்களுக்கு, போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பேன்

03.உங்கள் பணி விலகல் இந்த நேரத்தில் வேண்டாம் என்று நினைக்கிறேன்? நான் ஒரு ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த அமைப்பிலிருந்து நான் விலகவில்லை.இந்த இடத்திலிருந்து யாரும் என்னை அசைக்க முடியாது. இந்த இடத்திற்கு வருவதற்கு நான் மிகவும் கடினமாக உழைத்து இருக்கின்றேன். இதனால்தான் ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் என்மீது காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கின்றார்கள்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச அலுவலகத்திற்கு தலைவரானார் ஈழத்துப்பெண்

ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் பெற்ற அமைப்பான Alliance Creative Community Project (ACCP Global) கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து தமிழ் பெண்ணான திருமதி ராஜி பாற்றர்சன் அவர்களை ஜெனீவா சுவிட்சர்லாந்து மற்றும் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான சர்வதேச பணியின் தலைவராக நியமனம் செய்துள்ளது.

இவர் வட தமிழீழம் , வன்னி மண்ணை சொந்த இடமாக கொண்டதுடன் 2010ற்கு பின்பு தான் புலம் பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தாயகத்தில் சிறு வயதில் இருந்தே பல சமூக சேவைகளை முன்னெடுத்து வந்ததுடன், கனடாவில் குடியேறிய பின்னரும் அந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தவர் ஆவார்.

அவரது கடின உழைப்பினால் கிடைத்த இந்த பொறுப்பான பதவி அவரை விட, எமது இனத்தின் விடுதலைக்கு சர்வேதேச மட்டத்தில் கிடைத்துள்ள வெற்றி பாதையாகும்.

க.பொம்மை