ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களாக உள்ள ஐக்கியதேசிய கட்சியை சேர்ந்தவர்கள் எவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை
என முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக அதன் உறுப்பினர்கள் வேட்பாளர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நான் எனது கட்சி உறுப்பினர்களின் பக்கம் உறுதியாக நிற்பேன் என தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச ஐக்கியதேசிய கட்சியின் நடவடிக்கைகளால் அச்சமடையவேண்டாம் என தனது கட்சியின் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
பெரும்பாலான சிங்களவர்கள்,ரணிலை ஒரு போதும் ஆதரித்தது கிடையாது.அதனாலயே அவர் பின்கதவால் ஆட்சியை பிடிக்கும் தந்திரங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்திருக்கார்.இன்னும் எத்தனை பேர் ரணிலின தந்திரபுத்தியில் நிக்கி அழிவதற்காக சிங்கள அரசில் காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.ஆனால் ஒன்று சிறிலங்கா தமிழ் அரசியல்வாதிகளுக்கு ரணில் கூட்டு நன்றாக போவதுதான்,அவர்கள் மீதான சந்தேகத்தின் உச்சகட்டம்.