இராணுவ ரீதியாக, சர்வதேசச் சமூகம் தமிழருக்கு உதவவில்லை. சர்வதேச நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான உளவுத் தகவல்களை சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தன. அதுவே, புலிகளை பலவீனப்படுத்தியது. யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவருவதற்கு உதவிய சர்வதேசச் சமூகத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தரும் கடமையும் இருக்கிறது. அதற்கு, சர்வதேச சமூகம் முயற்சிக்க வேண்டும்” என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இனபடுகொலையாளி மஹிந்த ஆட்சிக்கு வரும் போது சர்வதேசமும்,பங்காளி ரணில் ஆட்சிக்கு வரும் போது நல்லிணக்கம் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்று மாறி மாறி கதையளப்பது சம்பந்தருக்கு புதிது அல்ல,வயதானால் ஓய்வெடுக்கலாம்.இல்லாமல் தேவாரம் பாடி கொல்ல வேண்டாம்.ஒரு இனத்துக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை,உபத்திரம் தரவேண்டாம்.தவறானவர்கள் விலகும் போதே சரியானவர்கள் தமிழருக்கான பொறுப்பை எடுத்து கொள்ளமுடியும்.தவறானவர்கள் தொடர்ந்து விட்டு வைக்கும் போது மேலும் பல தவறானவர்கள் அங்கே கூடிவிடுவார்கள்.இப்போது தமிழர் அரசியலில் நடப்பது அதுதான்.