07 ஆசனங்கள் நம்பிக்கை,தெல்லிபளை சென்ற சம்பந்தன்…

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஏழு ஆசனங்களை கைப்பற்றும் என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை ராஜேஸ்வரி மண்டபத்தில் நேற்று(சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசாங்கத்தினை வீழ்த்துவதிலும், மாற்றுவதிலும் நாங்கள் பாரிய பங்களிப்பு செய்தோம். எமது உதவியின் காரணமாக அந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. இரண்டு பெரிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அரசாங்கத்தினை அமைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த அரசாங்கம் தொடரவில்லை.

இன்றைக்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பல விடயங்களை நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று. விசேடமாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் சம்பந்தமாக இன்னும் நிரந்தரமான தீர்வு ஏற்படவில்லை.

கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட அரசியல் ஆசனங்களை மக்கள் நிராகரித்தார்கள். அந்த அரசியல் சாசனங்களிலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கூடிய வகையில் அதிகாரப்பகிர்வு, அதிகாரம் பரவலாக்கப்பட்டு தமிழ் மக்களின் இறைமையின் அடிப்படையில் அந்த அதிகாரங்களை பயன்படுத்தி எம்மை ஆட்சி செய்யக்கூடிய நிலைமை இருக்கவில்லை.

நாங்கள் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல. தற்போது சில கட்சிகள் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. அவை தேர்தலுக்கு பின்னர் மறைந்து விடும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.