செத்துவிடுங்கள் ஐயா!

164

மகிந்தவை மைத்திரி பிரதமராக நியமித்தபோது மகிந்தவே உங்களிடம் நேரிடையாக ஆதரவு கேட்டார். ஆனால் நீங்கள் ஆதரவு வழங்கவில்லை.

அதன்பின்பு கோத்தபாயா ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டபோது நீங்கள் வழங்கவில்லை. மாறாக கோத்தா வந்தால் மீண்டும் வெள்ளை வான் வரும்; என்றீர்கள்.இப்போது அவர்கள் யாருடைய தயவும் இன்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கும்போது வலிய சென்று ஆதரவு தருவதாக கூறுகின்றீர்கள்.

அவர்கள் ஆதரவு கேட்காமலேயே சேர்ந்து பயணிக்க தயார் என்று அறிக்கை விடுகின்றீர்கள். இவ்வாறு கூறுவதன் மூலம் எதனைப் பெற முடியும் என நம்புகிறீர்கள்?ஜனாதிபதி தேர்தலில் தமிழர்தான் தீர்மானிக்கும் சக்தி என்றீர்கள். ஆனால் அவர்கள் தனிச் சிங்கள வோட்டில் ஜனாதிபதியாகிக் காட்டியுள்ளனர்.

அதன்பின் விகிதாசாரத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாது என்றீர்கள். இப்போது அவர்கள் அதையும் செய்து காட்டியுள்ளார்கள்.இருந்தும் சேர்ந்து பயணிக்க தயார் என்று வலிய கூறுகின்றீர்கள். இதன்மூலம் உங்கள் சொகுசு பங்களாவை தக்க வைப்பதுதான் நோக்கம் என்றால் அதைவிட தயவு செய்து செத்துவிடுங்கள் ஐயா.

Balan Tholar