தமிழரை ஏமாற்றி முடித்து எமனை ஏமாற்றி திரியும் சம்பந்தர் ஐயா

228
[poll id= “5”]

சம்பந்தர் அய்யாவை பெரும் சாணக்கியர் என அவரின் சில விசுவாசிகள் எழுதி வருகின்றனர்.

ஆனால் அவர் இதுவரை சாதித்த சாணக்கியம் என்னவென்று அவர்கள் ஒருபோதும் எழுதியதில்லை.

நாம் அறிந்தவரையில் ஒவ்வொரு வருடமும் “ இந்த வருட இறுதிக்குள் தீர்வு வரும்” என்று அறிக்கை விட்டதைத் தவிர வேறு எதை அவர் சாதித்திருக்கிறார்?

பலரை சில காலம் ஏமாற்றலாம். சிலரை பலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.

ஆனால் ஏமாற்ற முடியும் என்று சம்பந்தர் அய்யா நம்புகிறார். அவர் தமிழ் மக்கள் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முயல்கிறார்.

படித்த பட்டதாரிகள் தமக்கு வேலை கேட்டபோது வேலை பெற்றால் அப்புறம் தீர்வு பெற முடியாமல் போய்விடும் என்றார்.

ஆனால் தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமன்றி தான் தங்குவதற்கு இரண்டு சொகுசு பங்களாக்களும் கேட்டுப்பெற்றார்.

சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய உதவும்படி கேட்டபோது தன்னிடம் திறப்பு இல்லை என்று கிண்டலாக பதில் கூறினார்.

தனக்கு இந்திய அரசின் உதவியுடன் டில்லியில் இருதய சிகிச்சை செய்தவர் மன்னாரில் இருந்து சென்ற ஒரு ஏழை முதியவரின் புற்றுநோய் சிகிச்சைக்கு வெறும் 400 ரூபா மட்டுமே கொடுத்தவர்

அதேவேளை தனது பத்திரகாளி கோயில் புனரமைப்பிற்கு அரசிடமிருந்து 2 கோடி ரூபா பெற்றுக் கொடுத்தவர்.

தனது இரண்டாவது சொகுசு பங்களாவிற்கு பெயிண்ட் அடிக்க 4 கோடி ரூபா விசேட பிரேரணை மூலம் பெற்றுக்கொண்டவர்.

காலம்பூரா இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பவர் ஆனால் தமிழ் மக்களுக்காக இந்தியாவிடம் எதையும் வற்புறுத்தி பெறாதவர்.

இப்போது மீண்டும் இந்தியாவின் உதவியுடன் தீர்வு என அறிக்கை விடத் தொடங்கிவிட்டார்.

ஒரு வருடத்திற்குள் தீர்வு என்று கடந்த தேர்தலின்போது கூறியவர் இப்போது இந்தியாவின் உதவியுடன் தீர்வு என கூறத் தொடங்கிவிட்டார்.

அவர் என்ன கூறினாலும் அதை “சாணக்கியம்” என புகழ்ந்து எழுதுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது.

இதுவரை தமிழ் மக்களுக்காக எதையும் செய்யாதவர் இனி தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவார் என எப்படி நம்புவது?

Gobi Nath