மாவை என்னை கொலை செய்ய சூழ்ச்சி செய்தார்? – ஆனந்தசங்கரி!

168

கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராஜா தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த போது தன்னை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தகவல் வெளியிட்டார்
யாழ் ஊடக அமையத்தில் 2/9/2020 புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் மாவை சேனாதிராசா தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சிக்குள் அங்கம் வகித்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானால் என்னை கொலை செய்வதற்காக வெளி மாவட்டத்திலிருந்து ஒருவரை அவரின் சிபார்சின் பேரில் கட்சியின் அலுவலக நடவடிக்கைக்காக திட்டமிட்டு கொண்டு வந்தார் .

அமிர்தலிங்கம் சுடப்பட்ட போது அருகிலிருந்த மாவை சேனாதிராசா தப்பியோடி விட்டார் அவரை காப்பாற்ற சிறிதளவேனும் முயற்சி செய்திருந்தால் அவருக்கு உடம்பில் சிறு காயங்களேனும் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு அவ்வாறு செய்யாமல் எப்படியாவது பாராளுமன்றம் சென்று விட வேண்டும் என்ற ஆசையால் அவர் அவ்வாறு செய்யவில்லை என நான் நினைக்கிறேன்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை மாவை சேனாதிராசா தனக்கு தெரியாமல் நியமித்து விட்டதாக புலம்புகிறார் அவர் அவ்வாறு புலம்புவதன் காரணம் கருங்கற்களினால் கொண்ட மாளிகையை கட்டியது மட்டுமல்லாமல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பல சுகபோகங்களை அனுபவித்ததன் விளைவே இன்று அப்பதவியை தேடிச் செல்வதற்கு காரணமாக இருக்கிறதே தவிர அவர் மக்களுக்காக பாராளுமன்றம் செல்வதாகத் தெரியவில்லை.

பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் வாகன வரியில்லா அனுமதிப் பத்திரத்தை சுமார் 60 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்த மாவை இன்று அந்தப் பதவி தனக்கு இல்லாமல் போய்விட்டது என எண்ணி தன்னை புலம்பெயர் அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் தன்னை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லுமாறு கூறுகின்றனர் என முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்.

2008 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருந்த கடைசி நேரத்தில் போர் நிறுத்தத்தை செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தையோ வெளிநாடுகளையோ வற்புறுத்தாத அப்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருபத்திரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உணவகத்தில் அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்தார்கள்

தமிழ் தேசியம் தொடர்பில் பேசி வரும் சம்பந்தன் , கஜேந்திரகுமார் அக் காலப் பகுதியில் தமிழ் மக்கள் மீது உண்மையான விசுவாசம் வைத்திருப்பார்கலே ஆனால் தமது பாராளுமன்ற பதவிகளை துறந்திருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் அவ்வாறு செய்யாமல் தமது தொலைபேசிகளை நிறுத்தி வைத்து விட்டார்கள்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் தமிழ் தேசியவாதிகள் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் அழிவிற்கு காரணமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் பதில் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.