இராணுவ முற்றுகையில் செல்வச் சந்நிதியான் ஆலயம் – வழிபாட்டிற்கும் முற்றாகத் தடை!

50

தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்து உயிர்நித்த 33வது ஆண்டை முன்னிட்டு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் தீவரம் காட்டிவரும் நிலையில் இராணுவ முற்றுகைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது செல்வச் சந்நிதியான் ஆலயம்.

தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தலை முன்னெடுக்க வடக்கு கிழக்கு தழுவியதான நீதிமன்றத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடயத்திற்காக ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த முன்னெடுப்பில் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய சூழலில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.

12 நாட்கள் ஒரு துளி நீர்கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த இன்றைய நாளில் அடையாள உண்ணாவிரதத்தை கூட்டாக மேற்கொள்ள தீர்மானித்திருந்த நிலையில், வல்வெட்டித்துறை பொலிசாரால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் குறித்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தடை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related:
செல்வச்சந்நிதி உண்ணாநிலைப் போராட்டம்; தடை விதித்தது பருத்தித்துறை நீதிமன்று!
“திட்டமிட்டபடி நாளை போராட்டம்” – தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிப்பு!
இதையடுத்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வச்சந்நிதி முன்றலில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பருதித்துறை நீதிமன்று நேற்று தடை விதித்திருந்தது.
பருத்தித்துறை நீதி மன்றத்தினால் குறித்த ஆலயத்தில் போராட்டம் மேற்கொள்ள மட்டுமே தடைவிதிக்கட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் ஆலயத்திற்கு செல்லும் 3 பிரதான வீதிகளையும் மூடியுள்ள இராணுவத்தினர் வழிபாட்டிற்காகக் கூட எவரையும் அனுமதிக்காது விரட்டியடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு முதல் குறித்த வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை முதல் முற்று முழுதான இராணுவ முற்றுகைக்குள் சந்நிதியான் ஆலய சூழல் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது.