கனடா ஊழல் தொடர்பில் கருத்து வெளியிட அனுமதித்தமைக்கு எதிராக யாழ்.ஊடக அமையத்திற்கு எதிராக நஸ்ட ஈடு கோரி எம்.ஏ.சுமந்திரன் கடிதம் அனுப்பவுள்ளதாகசாவகச்சேரியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
இதனிடையே அவரது தேர்தல்கால சகபாடியான சிறீதரனோ தங்களோடு ஒத்துழைத்தால் தமிழரசுக் கட்சி தலைவராக மாவை தேர்தலில் தோற்றால் தனது இடத்தை ராஜினாமா செய்து விட்டு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.நேற்று சாவகச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.ஏ.சுமந்திரனுடன் பங்குகொண்டு உரையாற்றிய சிறிதரன், எதிர்வரும் தேர்தலில் மாவை தோற்றால், தனது பதவியை இராஜினாமா செய்து, மாவையை எம்பி ஆக்குவேன் என சூளுரைத்துள்ளார்.
அதற்கு நிபந்தனைகளை பட்டியலிட்ட அவர், உதயன் பத்திரிகை உரிமையாளர் ஈ.சரவணபவன் மீதும் இன்னொரு தமிழரசு கட்சி உறுப்பினர் மீதும் தான் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுத்தால், அந்த தியாகத்தை செய்வேன் எனவும் கூறியுள்ளார்.அதேவேளை கனடா நிதி முறைகேட்டை அம்பலப்படுத்திய பெண்மணி உள்ளிட்ட நால்வரை கட்சியிலிருந்து நீக்கிய நடவடிக்கைக்கு அவர்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு , சிறிதரன் சுமந்திரன் நன்றி தெரிவித்துள்ளனர்.உதயன் சரவணபவனுடன் சுமந்திரனுக்கு உள்ள முறுகல்கள் காரணமாகவே,சிறிதரன் அவருக்கு பக்கபலமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.சரவணபவனும் தனது ஊடகமான உதயன் பத்திரிகை மூலம் சுமந்திரன் சிறிதரன் மீதான கருத்து தாக்குதல்களை முன்னமே தொடங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.கூட்டமைப்புக்குள் இத்த முறை நிலவும் பலத்த விருப்பு வாக்கு போட்டி காரணமாக ஒருவரையொருவர் பலி கொடுத்து மற்றையவர் முன்னேற துடித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
தனது தேர்தல் வெற்றி குறித்த சந்தேகமான களநிலைமை தெரிந்தமையினால் இவ்விடயங்கள் தொடர்பாக மாவை மென்போக்கை கடைபிடித்து வருவதுடன்,எம்பி பதவி இல்லை என்றால் கூட அடுத்த மாகாணசபை தேர்தலில் நின்று முதல்வர் ஆகி ஏற்கனவே மக்களுக்கு செய்த சேவைகளை தொடரலாம் என்ற எண்ணதில் இருப்பதால்,எதாவது ஒரு பதவி வரட்டும் என்ற போக்கில் இருப்பதுடன்,சுமந்திரன் சிறிதரனுடன் மோதல் போக்கை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடதக்கது.முதல்வர் பதவி மீது சரவணபவன் எம்பிக்கு ஒரு கண் இருப்பது குறிப்பிடதக்கது.இந்த கூட்டமைப்பு உட்கட்சி மோதல்களில் மாவையை உள்ளே இழுத்து கோர்த்துவிட்டது சரவணபவன் தான் என்று உள்வீட்டு தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை இவ்வாறு இவர்கள் பதவிக்கு வெளிப்படையாக தங்களுக்குள் சண்டைபிடித்து கொள்வது நகைசுவையாக இருப்பதுடன்,இவர்களுக்கு இருக்கும் அரசியல் அறிவும் இவர்களின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளையும் கேட்க இங்கேயிருக்கும் எங்களுக்கே இலேசாக மயக்கம் வருகின்ற மாதிரி இருக்கின்றது.