சரணடைந்தவர்கள் விடயத்தில் தமிழர் தரப்பின் தொடர் மெளனம்!

243

சரணடைந்தவர்களை எங்கே என்று கேட்கக்கூடாது கேட்டால் உயிருடன் இருக்கக் கூடியவர்களையும் கொண்டு விடுவார்கள் என்றார் எமது பேச்சாளர். இவ்வாறு கூறியே அவர்கள் குறித்த விடயத்தை கிடப்பில் போட்டார் அவர். அதனை கூட்டமைப்பு சார்ந்து அனைவரும் ஒத்தூதினர். தமிழ் மக்களை வாக்களிக்க வைத்து நாம் தான் ஆட்சியில் அமர்த்தினோம் என முழங்கி தொடர்ந்தும் முண்டு கொடுத்துக் காத்த நலலாட்சி என்ற அரசிடம் யாருமே சரணடைந்தவர்கள் காணாமல் போனவர்கள் விடயத்தை முக்கிய விடயமாக தொடர்;ச்சியாக பேசவில்லை! எழுப்பவில்லை!!

ஆனால் தற்போதைய கோத்தா அரசோ அவ்வாறு எவருமே தற்போது உயிருடன் இல்லை அனைவருமே இறந்து விட்டார்கள் என அடித்தே கூறிவிட்டது. அது சரி இப்போதும் ஏன் அமைதி காக்கிறீர்கள்? அவர்கள் வானில் இருந்து அதிசயமாக இறங்கி வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையிலா? அல்லது அதைப் பற்றி என்றுமே பேச விரும்பவில்லை என்ற உண்மையின் வேளிப்பாட்டிலா? அல்லது கோத்தா அரசுடனும் தொடர முயற்சிக்கும் இணக்க அரசியலின் வெளிப்பாட்டிலா? சரணடைந்தவர்கள் அதன் பின் தடுப்பில் வைத்து படுகொலை செய்யப்படுவது மிக மோசமான போர்க் குற்றம் மனிதாபிமானக் குற்றம். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் வயதில் மூத்தவர்கள் பெண்கள் குழந்தைகள் அடங்கும் என்பது தான் பெருந்துயரம்….

Nehru G