மாகாணசபைகள் என்பது இலங்கையின் உள்விவகாரம். அது குறித்து இலங்கை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். ஏனைய நாடுகளின் தலைவர்கள் இல்லை என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாதுக்கையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகள் என்பது இலங்கையின் உள்விவகாரம். அது குறித்து இலங்கை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். ஏனைய நாடுகளின் தலைவர்கள் இல்லை என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பாதுக்கையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“நாங்கள் மாகாணசபைகளை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும் என இந்தியா அச்சுறுத்தவோ அல்லது தலையிட முடியாது . இலங்கை சுதந்திரம் இறைமை மிக்க நாடு. இந்தியா எங்களுடைய உள்விவகாரங்களில் தலையிட முடியாது.
இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை பல நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும். அதில் ஒன்று விடுதலைப்புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைவது. எனினும் இந்தியா இதனை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக இந்திய இலங்கை எவ்வளவு தூரம் வலுவானது என்ற கேள்வி எழுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.