2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளாலும் ,சிறிலங்கா அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் சிங்கள இராணுவம் பின் நகர்த்தப்படுவதற்கு பதிலாக 11.08.2006ற்குப் பின் தொடர்ச்சியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மாறாக முன்நகர்த்தப்பட்டு வருகிறது
சர்வதேச நாடுகளின் ஒன்றுதிரண்ட உதவியுடன் பதினாறு மில்லியன் சிங்கள மக்களிடம் இருந்து இராணுவத்திற்குப் படைகளை இணைத்து வருகின்றன. இலங்கையில் உள்ள இருபது மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் சிங்கள அரசிற்கு வரி செலுத்துகின்றார்கள். அவ்வரிப்பத்தில் பெரும்பகுதியை போருக்கு சிங்களம் திருப்பிவிட்டுள்ளது.
எனவே உலக நாடுகளிடம் இருந்து தாராளமாக ஆயுத தளபாடங்கள் இறக்கப்பட்டு தமிழ்மக்களை நோக்கி திருப்பப்பட்டுள்ளது. அதேபோல் சிறிலங்காவில் வரி வருமானத்தின்பெரும்பகுதி தமிழ் மக்கள்மீதான போருக்கு திருப்பப்பட்டுள்ளது. அத்துடன் சிங்களப் படைவீரர்கள் அனைத்து கடல், தரை, ஆகாய, ஆயுத தளபாடங்களை ஒருங்கிணைத்து தமிழ் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து அவர்களின் சொத்துக்களை சூறையாடி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறனர். இதற்கு பிரதிஉபகாரமாக இராணுவத்திற்குசிங்கள அரசு மகிந்த சிந்தனையின் கீழ் ரண விரு கிராமங்களில் 50,ooo வீடுகளை நிர்மானிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள அதன் முதற்கட்ட நடவடிக்கையாக வீதிகள் , நீர், மின்சாரம் .தொலைபேசி, வங்கி, வர்த்தக நிலையங்கள், மருத்துவமனை வசதிகள் கொண்ட 15OO வீடுகள் உள்ளடங்கிய படைவீரர் கிராமம் ஒன்றை நிர்மானித்துள்ளார்கள் .
ஆக்கிரமிப்புப் படைகளில் பணிபுரியும் ஆக்கிரமிப்பாளர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மேம் படுத்தும் முகமாக மலே வீதியில் கைவிடப்பட்டிருந்த பழைய கல்வி அமைச்சுக் கட்டிடம் தற்போது நவீன கல்வி நிறுவனம் ஒன்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2OO9ஆம் ஆண்டு பாதீட்டில் ஆக்கிரமிப்புப் படையில் உள்ள வீரர்களுக்கு படைவீரர் கிராமங்களை அமைப்பதற்காக 35OOமில்லியன் ரூபா ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.2OO9ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புப் படைகளின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு மட்டும் 45OOமில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவை மக்களின் வரிப்பணம்.
சிங்களஆக்கிரமிப்பாளர்களுக்கு எப்படி மாற்றப்படுகின்றது என் பதற்கு சிறந்த உதாரணங்கள் ஆகும் .
திட்டமிட்ட உணவு உற்பத்தி உணவு விநியோகத் தடை.!
வன்னியில் உணவு பயிரிடப்படும் கணிசமான நிலங்களை சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாக உணவு உற்பத்தியை தடுப்பதற்கு சிங்கள இராணுவம் ஆக்கிரமிக்காமல் எஞ்சிய சிறிய நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள, விவசாயத்திற்கு தேவையான உரமெடுத்துவர சிங்கள அரசு முற்றாகத் தடைவிதித்துள்ளது.
இதன் வெளிப்பாடு என்ன?
சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதன் நோக்கம் என்ன?
இதன் சாராம்சம்” உணவு உற்பத்தியைத் தடுத்து ஒரேயொரு பாதையால் செல்லும் உலக உணவுத்திட்ட உணவு விநியோகப் பாதையை மூடி அல்லது கட்டுப்படுத்திபட்டினிச்சாவு அவலத்தை ஏற்படுத்தி இவ் அவலங்களை சர்வதேசத்திற்கு தெரியவராமல் கவனிப்பதுடன் தமிழ் மக்களை அடிபணியச் செய்து வவுனியாவில் உள்ள பெரிய முட்கம்பி வேலி கொண்ட முகாமில் அவர்களை அடைத்து, சிங்களம் தரும் தீனியையும், தீர்வையும் ஏற்கவைத்தல் ஆகும்” இரண்டு. நல்ல பதில் வன்னியிலுள்ள O.4மில்லியன் தமிழ் மக்கள் விரைவில் சிங்களத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும்கிடையாது.
உள்ளக இடப்பெயர்வு-இராணுவநடவடிக்கை காரணமாக கிளிநொச்சி அரச அதிபர் அலுவலக தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் 219,878 மக்கள் தொகையில்174,979பேர் (2OO8 ஒக்டோபர் தகவல் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ் இடம்பெயர்ந்த மக்களுக்கு உலக உணவுத்திட்ட அமைவில் ஒருவாரத்திற்கு ஒரு நபருக்கு14OOகிராம் அரிசி, 14OOகிராம் மா,42Oகிராம் பருப்பு: 14O கிராம் சீனி,14oகிராம் எண்ணெய் வழங்கப்பட வேண்டும்.ஒரேயொரு பாதையால் வவுனியாவில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டும் சிங்களஅரசு அடிக்கடி பாதையை மூடிமுட்டுக்கட்டை போடுவதால்பெரும்பாலான வாரங்கள் மக்களுக்கு உணவு விநியோகிக்கப்படுவதில்லை .
இதனால் மக்கள் உண்ண உணவின்றி அடிப்படைவசதிகளற்றநிலையிலேயே வாழ்கின்றனர் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு கடந்தவாரத்திற்கு 27கிராம் அரிசி வழங்கப்பட்டுள்ளது. இது கஞ்சி குடிப்பதற்குக் கூடபோதுமானதாக இல்லை. கிளிநொச்சி மாவட்ட அரச உயர்அதிகாரியின் தகவலின் பிரகாரம் 2008 ஒக்டோபர் மாதம் சிறிலங்க அரசால்400.OOO லீற்றர் மண் ணெண்ணை அனுமதிக்கப்பட்டிருந்தும் திட்டமிடப்பட்ட பாதைத்தடையால் 270,000 லீற்றர் நன்றி வேர்கள் இணையம் மண்ணெண்ணை கொண்டுவரப்பட்ட .
மிகுதி 130000 லீற்றர் மண்ணெண்ணை கொண்டு செல்வது தடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு தாம் அனுமதிக்கும் தகவலை வெளியிடுவது அதன் பின் கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டதன் பெரும்பகுதியை சிங்கள இராணுவம் தடுத்து வருகின்றது. வன்னியில் உணவு உற்பத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்படாத வகையில் கிருமிநாசினி உரவகைகளைக் கொண்டு செல்லப்படுவற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
இதன் உத்தேச நோக்கம் என்ன? நிவாரணத்தையே நம்பி வாழ், குறைந்த உணவை உண்டு ஆரோக்கியமற்ற சமுதாயமாகத் தமிழன்உருவாகி நோய்வாய்ப்பட்ட பின் திட்டமிடப்பட்ட வகையில் மருந்துப்பொருட்கள் தடுக்கப்பட்டத விளைவாக தமிழ் மக்கள் போதிய சிகிச்சையின்றி சோமாலியா போன்ற நிலைக்குத் தள்ள சிறிலங்கா அரசு கங்கம் கட்டியுள்ளது. முல்லைமாவட்ட அரச அதிபரின் தகவலின் படி சிறிலங்கா இராணுவத்தின் அர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பெரும் உணவு நெருக்கடியில் இருப்பதாகவும்53,273குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில் 35.268குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தினுடாக உலர்உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வந்ததாகவும் கடந்தநவம்பர் மாதம் பதினொன்றரை உணவுப் பொருட்களே உலக உணவுத் திட்டத்தினுTடாக மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2008 டிசம்பர் மாதத்தில் முதலாம் வாரத்திற்கான உணவுப்பொருட்கள் கையிருப்பில் இல்லாததினால் நிவாரணம் வழங்கப்படவில்லை . இரண்டாம் வாரத்திற்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் வாரம் வந்துள்ள நிலையில் 17.12.2008 வரை உணவுப் பொருட்கள் வராததினால் நிவாரணம் வழங்கப்படவில்லை . 15.12.2008 அன்றைய நிலையில் கணக்கொடுப்பில் 341 கிலோகிராம் அரிசி, 3124 கிலோகிராம் மா, 76,458 32கிலோகிராம் பருப்பு , 12,187.04 கிலோகிராம் சீனி 437.9 கிலோகிராம் எண்ணெய், என்பனை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரு குடும்பத்திற்கு 9.6கிராம் அரிசி விநியோகிக்கும் நிலையில் மூன்றாம் வாரத்திற்கான உணவுப் பொருட்களை அரசும் சிங்களப்படைகளும் அனுப்ப முட்டுக்கட்டை போடுவார்களாயின் ஒரு குடும்பத்திற்கு 9கிராம் அரிசியும், 88.57கிராம் மாவும், 345.5 கிராம் சீனியும், 12.39 கிராம்எண்ண யும் விநியோகிக்குதம். நிலையில் முல்லைத்தீவு அரச செயலகம் செயற்படுகின்றது.
உள் உள்ளக இடப்பெயர்வு – கனமழை காரணமாக
தற்போ து வன்னியில் பெய்துவரும் கனமழை காரணமாகமக்கள் மீண்டும் அவலங்களை சந்தித்த வண்ணம் உள்ளனர். முன்னர் பெய்த கனமழை காரணமாக இடப்பெயர்வுகளையும் உயிரிழப்புக்களையும், சொத்தழிவுகளையும் சந்தித்திருந்தர் குடியிருப்புகள் அழிவடைந்தும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கமுடியாது வெளியேற்றிய மக்கள் பெரும் அவலங் களை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில திங்களாக மழையின்மையால் மீண்டும் இடம்பெயர்ந்திருந்த இடங்களுக்கு செல்வதற்கு தயார்படுத்திய வேளைமீண்டும் கனமழை பெய்கின்றமையால் தொடர்ந்தும் தாம் இடம்பெயர் ந்திருந்த இடங்களுக்கு செல்லமுடியாத நிலையில் வன்னியில் தமிழ் மக்கள் இருக்கின்றனர்மரநிழலில் வாழ்ந்த மக்கள் வெள்ளம் காரணமாக மரத்திலேறி வாழவேண்டிய நிலை உருவாகியுள்ளது. சிங்களப்படைகளின் குண்டுமழை, கனமழை கடுமையாகப் பொழி கின்றது. இதனால் மக்கள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் ஏதிலிகளாகி உள்ளனர். இவ்அவலங்கள் உலகத்தி ற்கு தெரிவித்தில்லை கிளிநொச்சியை விரைவில் கைப்பற்றி விடலாம் எனநினைத்த படையினருக்கு தற்போது புலிகள் கொடுக்குதம் பதிலடி சிங்களப்படையினருக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்திவருகின்றது. வன்னிக்கான போரின் ஆரம்பம் முதலே போரிடும் ஆற்றல்மிக்க படையணிகள் பலத்தசேதத்தை சந்தித்து வந்ததால் இறுதிப்போரில் புதிய படையணிகளுடன் ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வன்னியில் சிங்களப் படைகளுக்கு ஏற்படுத்தப்படும் இழப்புக்கள் குறித்து செய்திகள் முற்றுமுழுதாக இருட்டடிப்பு செய்யப்படுவதால் யுத்தத்தின் உண்மைநிலை குறித்து தென்பகுதி மக்களுக்கு தெரிவதில்லை. வன்னிச்செய்திகள் மட்டுமே அந்த மக்களுக்கு தெரியப்படுத்தப் படுவதால் அவர்கள் ஒரு மாயையில் இருக்கிறார்கள்.
படையினருக்கான இழப்புக்கள் குறித்த உண்மைநிலை தெரியவந்தால் அவர்கள் ஆட்சியை மாற்றி விடுவார்கள். யுத்த வெற்றி அரசியல் வெற்றிக்காக பயன்படுத்தப்படுவதால் யுத்தத்தில் ஏற்படும் தோல்வி குறித்த செய்திகள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்துவிடும் என்ற அச்சம் நிலவுகின்றது யுத்தத்தில் படையினருக்கு ஏற்படும் இழப்புக்கள் குறித்தோ அல்லது இந்த யுத்தத்தில் அரசும் வெற்றிபெற முடியாது என்றோ கூறுபவர்களை ஆளும் தரப்பினர் துரோகிகள் என்றும், புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் முத்திரைகுத்தி விடுகின்றனர். படையினர் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று வருகையில் அதனைச் சகிக்காத அரசியல்வாதிகளே வன்னிப்போரில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுவதை கூற முற்படுவதாகவும் தென்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
சிறிலங்காப் படைகளின் கோர யுத்தத்தை நேரடியாக எதிர்நோக்கியுள்ள வன்னியிலுள்ள கிட்டத்தட்ட 4இலட்சம்தமிழ் மக்கள் சிங்களப்படைக்கு எதிராக களமாடி தமிழீழ மண்ணை விரைவில் மீட்பது மட்டுமன்றி தமிழீழத்திலுள்ள சிங்களப்படைக்கு சொந்தமான அனைத்து இராணுவ தளபாடங்களை தனதாக்கிக் கொள்ளும் காலம் மிக விரைவில் வரும்அப்போது தான் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை உலகம் உணரும்.
ஆக்கம் : க.பாலகிருஸ்ணன் . (B.COM)
பொருளாதார ஆய்வாளர்
வெளியீடு :எரிமலை
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”