தமிழர்களை ஒற்றுமையாக வாக்களிக்க கோரும் கூட்டமைப்பினுள் ஒற்றுமையில்லை – சசிகலா ரவிராஜ்

133
[poll id= “2”]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஓர் அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றே நான் கருதுகிறேன். அந்த ஒற்றுமை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். அந்த வகையில் தான் பரப்புரை நிகழ்வுகளில் நான் பங்கேற்கிறேன். நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது சகோதர வேட்பாளர்களுடனும் சேர்ந்து இயங்கவே விரும்புகிறேன். இது தொடர்பாக கட்சித் தலைமைக்கும் தெரியப்படுத்தியிருந்தேன் என சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களின் பெண் வேட்பாளர் என்ற வகையில் கட்சியின் மகளிர் அணி உட்பட சகல பெண்கள் அமைப்புகளின் ஆதரவை கோரும் எனக்கு சிலர் தடையை ஏற்படுத்துவது வேதனை அளிக்கிறது. பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த ஒருத்தியை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுவது வேதனை தரும் விடயமாகும். இது எனக்கு மட்டுமல்ல என்னை பின் தொடர்ந்து வரும் பெண் அரசியல்வாதிகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும். அத்தோடு, எனக்கு ஆதரவு அளிக்க நினைக்கும் பெண்களுக்கும் இது ஒரு சவாலாக காணப்படுகிறது.

பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கிறோம்; பெண்களை மதிக்கிறோம் என்று பேசுபவர்கள் உண்மையில் பெண்களை சுயாதீனமாக இயங்க அனுமதிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் என சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன்,சிறிதரன் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க மறுக்கும் சசிகலா,மாவை,சரவணவனுமன் கூட்டு சேர்ந்து பிரச்சாரங்களில் ஈடுபடுவதுடன்,சுமந்திரன் அணியுடன் மென்போக்காக பிரச்சாரம் செய்வதை பொறுக்க முடியாமல்,கடுமையான முட்டுக்கட்டைகள் போடப்படுவதுடன் சசிகலாவை தோற்கடிக்க திரைமறைவு வேலைகள் சுமந்திரன்-சிறிதரன் அணியினால் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது தெரிந்ததே.. கூட்டமைப்பினுள் உள்ள சக பெண்வேட்பாளரையை இவ்வாறு நடத்தும் இவர்கள் எவ்வாறு தமிழ் பெண் சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்துவார்கள்,தமக்குள் ஒற்றுமையில்லாத இவர்கள் தமிழ் மக்களை பார்த்து ஒற்றுமையாக தங்களுக்கு வாக்கு செலுத்த சொல்வது முரண்..