சசிகலா ரவிராஜ் வெற்றி உறுதி? தோற்கடிக்க கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் சூழ்ச்சி

102

நாடாளுமன்றத்தேர்தல் அறிவிப்பின் பின்னராக தமிழரசுக் கட்சிக்குள் குத்துவெட்டுக்கு உச்சமடைந்துள்ளது.சுமந்திரன் அணி, மாவை அணி, சிறிதரன் அணி ,வாலிபர் முன்னணி, மகளிர் அணி என்று உட்கட்சிக் குடுமிச் சண்டையால் ரண களமாகிக் கொண்டிருக்கிறது கட்சி. இந்தச்சண்டையில் இப்போது சுமந்திரன் அணியின் முழுக் கவனமும் திரும்பியிருப்பது சசிகலா ரவிராஜ் மீது என்பதுதான் வேடிக்கை.

சசிகலா ரவிராஜ் மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ்ஜின் மனைவி. சுமந்திரனின் வலது கையான முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் சாவகச்சேரியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சத்தஞ் சந்தடியின்றி சசிகலாவை களமிறக்கியது ஒரு தரப்பு,சஜந்தனின் திருகுதாளங்கள் தென்மராட்சி மக்களுக்கு நன்றாக தெரியும் என்பதால்,அவரை இறக்குவது பலன் விருப்பு வாக்குகள் அடிப்படையில் சுமந்திரனுக்கு பலன் தராது என்ற குறுக்கு கணக்கின் அடிப்படையில் சஜந்தன் கழற்றிவிடப்பட்டு,அந்த இடத்துக்கு சசிகலா ரவிராஜ் களமிறக்கப்பட்டுள்ளார்.(சஜந்தனுக்கு வேறு தெரிவில்லாமல் சுமந்திரனுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டுள்ளார்.ஆனாலும் சுமந்திரனை பொறுத்தவரை சஜந்தன் ஒரு வீண்பாரம்தான்.சிங்கள வழக்குகள் பைல் காவ கழுதை ஒரு கழுதை இருந்தால் நல்லது என்பதால் வைத்து கொண்டுள்ளார்)

ஆனால் இவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக சசிகலா வருகை இப்போது கூட்டமைப்பின் முன்னாள் எம்பிக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை மூன்று ஆசனங்களே கிடைக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது.இந்நிலையில் சுமந்திரனின் வெற்றிக்கு கடந்த முறை மதனியை பயன்படுத்தியது போல இம்முறை சசிகலாவை பயன்படுத்த திட்டமிட்டது சுமந்திரன் தரப்பு.ஆனாலும் சுதாகரித்துக்கொண்ட சசிகலா சுமந்திரனின் நிலைப்பாடு தனது கணவரது நிலைப்பாட்டிற்கு எதிரானதென தெரிவித்து பலியாடு ஆவதிலிருந்து தப்பித்துள்ளார்.இதனால் இவர்கள் கோபம் அவர் மீது திரும்பியுள்ளதுடன்,என்ன விலை கொடுத்தாலும் அவரை தோற்கடிக்க வேண்டும் என்று சூழ்ச்சி திட்டம் வகுத்துள்ளனர்.

அதே போன்று ரவிராஜிற்கு சாவகச்சேரியில் நிறுவப்பட்ட சிலையில் மாமனிதர் நீக்கப்பட்டமைக்கும் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் கூட்டமைப்பிற்கு விழும் புள்ளடியில் தனக்கொன்றென்ற அவரது பிரச்சாரம் பெண்களிடையே ஈர்ப்பினை தோற்றுவித்துள்ளது.இதனையடுத்து விழிப்படைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் தற்போது சசிகலாவை கவிழ்க்க மும்முரமாகியுள்ளனர்.