பொருத்தமான வேட்பாளாரா? சசிகலா ரவிராஜ்

129

தனது அரசியல் பதவியை தக்க வைப்பதற்கு சுமந்திரனின் தந்திரம்.யாழ் கிளி தொகுதியில் போட்டியிடும் ரவிராஜ் சசிகலாவை பயன்படுத்தப்படுவது வெறுமனே அனுதாப வாக்குகளுக்காக இதில் சசிகலா இரண்டாவது பலிக்கடா முதலாவது பலிகடா வேதநாயகம் தபேந்திரன்…

#ரவிராஜ் மரணத்தின்பின் 14 ஆண்டுகள் கணவனின் இழப்பால் அரசியலை வெறுத்து வீட்டில் இருந்தவருக்கு. இப்பொழுது எங்கே இருந்து இவருக்கு அரசியல் ஞானம் பிறந்தது வந்தது.புரட்சியும் புதுமையும் ஒரு சில நாட்களில் வந்து விடுவதில்லை.மக்களுக்கான அரசியலை மக்களுக்கு இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் 14 ஆண்டுகள் வன வனவாசத்தின் மூலம் கற்றுக் கொள்ள முடியாது…

#இவருக்கு தேவை ஏற்படவில்லை என்றால் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு தேவை ஏற்பட்டது தோல்வியில் இருக்கும் கூட்டமைப்புக்கும் அனுதாபம் தேடப்பட்டது அதற்கு முதன்மையாக வந்து நின்றவர் ரவிராஜ் சசிகலா.காரணம் விடுதலைப்புலிகள் அவரின் கணவருக்கு மாமனிதர் என்ற பட்டம் வழங்கியது மட்டும்தான்.மாமனிதர் வழங்கப்படாத எத்தனையோ பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் இருக்க பிள்ளைகள் இருக்க இவரின் தேவையென்ன.ஆம் மக்கள் விடுதலைப் புலிகளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அந்த மாமனிதர் என்ற அந்த சொற்களுக்காக இவருக்கு வாக்களிப்பார்கள் என்ற அதீத நம்பிக்கை சுமந்திரனுக்கு.மாமனிதர் பட்டத்தின் மதிப்பை பார்த்தீர்களா எப்படியான கீழ்த்தரமான செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்று.எப்படியெல்லாம் தமிழ் மக்களை ஏமாற்ற முடியுமோ அத்தனை வழிகளையும் கூட்டமைப்பு கையாளுகிறது தோல்வியின் பயத்தில்….

#சுமந்திரனின் கபட நாடகம்

விடுதலைப் புலிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் வெறுக்கும் சுமத்திரன். மறைமுகமாக முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளை சார்ந்துதான் அரசியலை கொண்டு செல்கிறார் தனது அரசியலுக்காக.இதுதான் உண்மை இதை அரசியல் விரும்பிகள் புரிந்துகொள்ள வேண்டும் இவரின் கபட நாடகத்தை…

#சரி விடயத்திற்கு வருகிறேன் இந்தப் பதினான்கு ஆண்டுகளாக எந்த ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எதிலும் பங்கு கொள்ளாத.முக்கியமாக மக்கள் மயப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் எதிலும் பங்கு கொள்ளாத ஒருவரை நீங்கள் ஏற்றுக் கொள்ள தயாரா அனைத்து மக்களிடமும் இந்த கேள்வியை வைக்கிறேன்..

#இருக்கு ஆனால் இல்லை அப்படியா கூட்டமைப்பின் மகளிரின் நிலைமை.

கூட்டமைப்பில் மகளிர் அணி இல்லையா அப்படி என்றால் அத்தனையும் வெளியுலகத்துக்கு மட்டுமா எம்மிடம் மகளிர் அணி இருக்கு என்பது….

#உங்களின் அர்ப்பணிப்புக்களை உங்களின் தலைமைகள் தான் விலை பேசி விற்கிறார்கள் சுமந்திரன் போன்றவர்கள்.

கூட்டமைப்பில் தகுதியுடைய மகளிர் இல்லையா.வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம் எத்தனை போராட்டங்களில் கலந்துகொண்டு உள்ளீர்கள் எத்தனை காலம் கட்சியின் உறுப்பினராக இருந்தீர்கள் வீதிகளெங்கும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் குரல் கொடுத்தவர்கள் இல்லையா இப்படி அதிக காரணங்களை கூறி உங்களிடம் நான் கேள்வி கேட்கலாம் உங்கள் கட்சியில் மகளிர் இல்லையா என்று நான் கேள்வியை வைக்கலாம் அதிக கேள்விகளை வைத்து உங்களை நான் காயப்படுத்த விரும்பவில்லை.ஆனால் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதற்காகவே தெளிவுபடுத்துகிறேன்…

#ஆகவே காலத்துக்கு காலம் இறக்குமதிகளை தான் கூட்டமைப்பு நம்புகிறது.இப்பொழுது தோல்வி பயத்தில் ரவிராஜின் மனைவியைக் கொண்டு வந்தவர்கள் நாளை மாகாணசபைக்கு மகளையும் பின்னர் பிரதேச சபைக்கு பேரப்பிள்ளையையும் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.மக்களை முட்டாளாக்கலாம் என்ற அதீத நம்பிக்கை இவர்களுக்கு உண்டு…

#இன்னும் சசிகலாவுக்கு கிளிநொச்சியில் எத்தனை கிராமம் யாழ்ப்பாணத்தில் எத்தனை கிராமம் எத்தனை பெண்கள் எத்தனை மகளிர்கள் எத்தனை பேர் கணவனை இழந்தவர்கள் இப்படி ஒவ்வொன்றையும் இனித்தான் அவர் கல்வி கற்க வேண்டும் இப்பொழுது கல்வி கற்று கொண்டிருப்பார்.இப்படிப்பட்ட ஒருவர்தான் உங்களுடைய தேவையா…

#ஆகவே சிந்தியுங்கள் யாருக்கு வாக்களிக்க போறம் என்பதை.தூக்கி எறியப்பட வேண்டியவர்கள் கூட்டமைப்பு.காரணம் அத்தனையும் தமிழ் மக்களை ஏமாற்றும் முட்டாள்தனமான செயல் பாடுகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவர்களின் செயல்பாட்டை.நிச்சயம் மக்களுக்கான அரசியலை செய்ய கூட்டமைப்பு இப்பொழுது இல்லை எப்பொழுதும் நினைக்கப் போவதில்லை.இந்தத் தடவை நீங்கள் வழங்கப் போகும் தீர்ப்பு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் தமிழர் அரசியல் வரலாற்றில்.

#குறிப்பு அதிக நண்பர்கள் கேட்கிறார்கள் யாருக்கு வாக்களிப்பது என்று.நிச்சயம் இந்த கேள்விக்கு வரும் சனிக்கிழமை பதிவு செய்கிறேன் பதிவை.மேலும் எனது முகப்புத்தகத்தில் தேர்தல் பிரச்சரங்கள் தொடர்பாக tag post செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நான் எந்தக் கட்சிக்கும் சார்பான அவன் இல்லை அதை தெளிவாக கூறுகிறேன்..

#எனது கருத்து சரி என்று பட்டால் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்…

அன்புடன்

அரசியல் சாணக்கியன்…

Manikam Sinnathampi