தனக்கு எதிராக சுமந்திரன், சிறிதரன் பாரிய சதி – குமுறும் சசிகலா ரவிராஜ்

729

எமக்கு எதிராக பாரிய சதி என் அன்பு மக்களே விரைந்து முடிவெடுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஆதாரமாக எமது ஆதரவாளர் உறுதி படுத்தி தெரிவிக்கையில்
உண்மை நான் நேரில் கண்ணால் பார்த்தேன்.. நகரசபை உறுப்பினர் சுபோதினி அவர்கள் 1 இலக்கத்திற்கு மட்டும் போடும்படி கச்சாய் சக்தி அம்மன் பாடசாலை வாக்கு நிலையத்திற்கு செல்லும் மக்களிடம் கூறுகின்றார்… 1ம் இலக்கத்தை கூறும் அவர் 3ம் இலக்கத்தை மறக்கவைத்து விட்டனர் என தெரிவித்தார் ஆனால் மக்களுக்கு தெரியும் என கூறிய அவர்.

இதே போன்ற சம்பவம் எமக்கு ஏற்பட்டுள்ள ஆதரவுத்தளத்தை தடுக்கும் நோக்கில் கிளிநொச்சி பகுதியில் தவிசாளர் வேளமாளிதரன் தென்மராட்சி – வடமராட்சி மற்றும் சாவகச்சேரியின் அதிகளவான பகுதியில் எனது இலக்கத்திற்கு வாக்கு அளிக்க வேண்டாம் என தீவிர பிரசாரம் செய்கிறார்கள் அதனை நம்ப வேண்டாம் உடன் வாக்களிப்பை துரிதப்படுத்துங்கள் என் அன்பு மக்களே என அவர் தெரிவித்துள்ளார்.