சுமந்திரன்-சயந்தனின் இறுதிநேர கள்ளபிரச்சாரம் – சசிகலா வேதனை!

285

இரவு வேளையில் ஏன் இப்படி மோசமாக செயற்படுகிறீர்கள்!! மன்றாடிக் கேட்கிறேன் விட்டுவிடுங்கள்…

எமது தொகுதியில் இரவு வேளையில் என்னுடைய இலக்கம் 03 மற்றும் எமது கட்சியின் தலைமையின் இலக்கம் 08க்கும் வாக்களிப்பதை தவிர்க்கும் படி தொகுதித் தலைவர் சயந்தன் வீடு வீடாக கூறுவது வேதனையாக உள்ளது.எனது கணவரின் தியாகத்தை பெருட்படுத்தாது இப்படி இரண்டு சட்டத்தரணிகள் செய்யும் செயற்பாடு எனது ஆதரவாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது…

மக்களே உங்களின் வரலாற்றுக் கடமையை சரிவரச் செய்யுங்கள் தமிழ் தேசியம் இந்த தேர்தலில் தோற்று விடக் கூடாது உங்களின் கரங்களில் எமது இனத்தின் எதிர்காலம்…மேலும் இதனுடன் நடந்த இன்னொரு சம்பவம்…..

தேர்தல் விதிமுறைகளின்படி இன்றைய தினம் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் யாருமே ஈடுபடக்கூடாது.ஆனால் சட்டம் அறிந்த சுமந்திரன் யாழில் இளைஞர்களை அழைத்து சற்று முன்னர் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததுடன்.

அந்த இளைஞர்களைப் பிரித்து வீடு வீடாகச் சென்று நட்பு அடிப்படையில் பேசுமாறும், எப்படியாவது ஒரு வாக்கினை தனக்காப் போடும்படியும் கேட்கும்படி பணித்துள்ளார்.சட்டத்தை கூறி இளைஞர்கள் தயங்கிய போது, பொலிஸ் பிடித்தால் நான் பார்த்துக்கொள்வேன். நீங்கள் பயப்படாமல் இறங்குங்கள் என்று கூறியுள்ளார்.

தோல்வி பயம் எப்படியெப்படியெல்லாம் அரசியல்வாதிகளை சட்டமீறல்களைச் செய்யவைக்கின்றது பாருங்களேன்.
என தனது முகநூல் வழியாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.