சுமந்திரன் விடயத்தில் பதுங்கும் சசிகலா,நிலையெடுத்து பாய்வாரா?

1568

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2020 பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் சதி இடம்பெற்றுள்ளது என்றும் பல்வேறு கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட வேண்டும். சுமந்திரன் தேசியப்பட்டியலில் தெரிவாகட்டும் என்ற நிலையில் இன்று காலை 10 மணி தொடக்கம் சாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜ் முன்றலில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் போராட்டம் குறித்து கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு தற்போது கருத்து தெரிவிக்க விரும்பாத போதும், அவருடன் கலந்துரையாடிய நிலையில் கட்சியின் தலைமைகளுடன் கதைத்துள்ளேன் இதுகுறித்து அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

ஆதரவாளர்களின் எண்ணங்களில் தான் எனது வெற்றி வாய்ப்பு குறித்து பேசப்பட்டது. இறுதிவரை அவர்கள் நம்பிக்கை பலமாக இருந்த நிலையில் என்னுடைய வாய்ப்பு பின் தள்ளப்பட்ட ஒரு அதிர்ச்சியை தந்தது இந்த அதிர்ச்சியை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் மத்திய கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை உள்ளே இறக்கப்பட்டமை குறித்து தான் நான் சுமந்திரன் மீது அதிருப்தி கொண்டேனே தவிர அதுகுறித்து அவரை நான் குறிப்பிடவில்லை. அழுத்தம் பிரயோகிப்பதாக குறிப்பிட்டமை தவறு அவ்வாறு எனக்கு நடக்கவில்லை. என்னுடைய படத்துடன் போலி முகநூல் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருவதை முன்னர் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.