சதை தின்னும் விலங்கு என்னிடம்முகத்துக்கு நேராக இரை கேட்டால்

17

துயரங்கள் நிரம்பிய பொதியினை
என் தோளினில் ஏற்றியது யாரோ..?

முள்ளு குத்திய வலியையே தாங்காத எனக்கு
இதயத்தில் ஆணி அடித்தது ஏவரோ..?

எதையோ நோக்கி போய் கொண்டிருந்த என்
பயணத்தில் தான் தடங்கல் ஏற்ப்பட்டதாக நினைத்தேன்.

நான் கடந்து போவதற்காக நீண்டிருந்த பாலம்
ஏனோ உடைக்கப்பட்டு விட்டது.

உயிர் நீங்கிய தேகம் போலவே – இந்த உலகத்தில் வாழ்வதற்கு நான் படைக்கப்படவில்லை

ஆனால் எனக்கு பிடிக்காதவைகளை நான்
ஏற்றுக் கொள்ளும் நிர்பந்தம் வரும் போது
சிலவேளை மௌனமாயிருந்திருக்கிறேன்.

அந்த அமைதி எவரையும் புண்படுத்தியது இல்லை

எனக்கு நிறைய சகிப்பு தன்மைகளை அது
கற்று தந்து இருக்கிறது.

பற்றி பிடித்து விட்டால் நெருப்பினை போல
எரிய தெரிய வேண்டும் – புகைந்து கொண்டிருக்க
என்னால் இயலவில்லை

சதை தின்னும் விலங்கு என்னிடம்
முகத்துக்கு நேராக இரை கேட்டால் – நான்
என் கழுத்தை அறுத்து நீட்டுவேன்.

ஒரு போதும் இன்னொருவர் நெஞ்சை பிளந்து
அதில் வடியும் குருதியை தொட்டு
என் பெயரை எந்த சுவரிலும் எழுதி விட்டு
போக மாட்டேன்.

Sajee.ks (kalai)