சாதாரண காய்ச்சலைப் போல் கொரோனா வைரஸ் மாறிவிடும்.

24

பிரித்தானியாவில் எதிர்காலத்தில் சாதாரண காய்ச்சலைப் போல் கொரோனா வைரஸ் மாறிவிடும்.மாட் ஹான்காக் நம்பிக்கை.

தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளின் மூலம் நமக்கு ஏற்படும் சாதாரண காய்ச்சலைப் போன்றே இந்த ஆண்டின் இறுதியில் கோவிட் -19 வைரஸூம் மாறி விடும் என்று பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிகிச்சையளிக்கக்கூடிய நோயாக கொரோனா மாறக்கூடும் என்று நம்புவதாக அவர் டெய்லி டெலிகிராப்பிடம் தெரிவித்தார்.

மருந்துகள் – மற்றும் தடுப்பூசிகள் சுதந்திரத்திற்கான எங்கள் வழியை குறிக்கின்றன என்றார்.

அனைத்து பிரித்தானியா பெரியவர்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்கு முன் தடுப்பூசி வழங்கப்படலாம் என்று நம்புகிறேன் என்றார்.

14 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முதல் தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டாலும், தடுப்பூசியால் பாதுகாக்கப்படாத சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு புதிய சிகிச்சைகள் அவசியம் என்றும் கூறினார்.

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசிகளுக்கு மாற்றாக ஆன்டிபாடி சிகிச்சைகள் பரிசோதிக்கப்படுகின்றன.

கோவிட் -19 காய்ச்சல் போல முடிவடைந்தால், நாங்கள் எங்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்கிறோம்,தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் நாங்கள் தணிக்கிறோம், பின்னர் எல்லாவற்றையும் மீண்டும் பெறலாம் என்று சுகாதார செயலாளர் கூறினார்.

இது வைரஸை பிரித்தானியாவிலிருந்து முற்றிலுமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

-ஈழம் ரஞ்சன்-