இல்-து-பிரான்சில் தீவிரசிகிச்சைக் கட்டில்கள் முற்றாக நிரம்பி உள்ளது. இதனால் இல்-து-பிரான்சில் 80% சத்திரசகிச்சைகள் இரத்துச் செய்ப்பட்டு, மேலதிகத் தீவிரசிகிச்சைக் கட்டில்களை கொரோனா நோயாளிகளிற்காக ஒதுக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.
இல்-து-பிரான்சில் 1.410 கொரோனா நோயாளிகள் தீவிரசிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 7.000 கொரோனா நோயாளிகள், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தீவிர சிகிச்சைப்பிரிவில் 1500 மொத்தக் கௌ;ளளவு இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பி விடும் நிலையில், இல்-து-பிரான்சின் தனியார் வைத்தியசாலைகளிலும், தீவிரசிகிச்சைக் கட்டில்களை பல்படுத்த வேண்டும்.
தனியார் வைத்தியசாலைகளிலும் அனைத்து நிகழ்ச்சி நிரல்படுத்தப்பட்ட சத்திரசிகிச்சைகளையும் இரத்துச் செய்வதன் மூலமும் மொகத்தமாக இல்-து-பிரான்சில் 2.250 மொத்த தீவிரசிகிச்சைக் கட்டில்களை உருவாக்க முடியும். எனவும் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.