ஒரு நூல் வித்தியாசம்!

86

இருவரும் இந்தியர்கள்.

இருவரும் இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்

ஒருவர் திலீபன் மகேந்திரன். இன்னொருவர் நடிகர் எஸ்வி.சேகர்.

இருவர் மீதும் இந்திய தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுன்ளது.

திலீபன் மகேந்திரன் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமன்றி அவருடைய கையும் பொலிசாரால் அடித்து முறிக்கப்பட்டது.

ஆனால் எஸ.வி.சேகர் கைது செய்யப்படவும் இல்லை. சிறையில் அடைக்கப்படவும் இல்லை.

மாறாக, அவர் மன்னிப்பு கோரினால் அவர் மீதான வழக்கை கைவிடுவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

அதுமட்டுமன்றி மன்னிப்பு கோருவது சம்பந்தமாக அவர் யோசிப்பதற்கு ஒருவாரகால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள்.

ஆனால் சட்டத்தின் முன் திலீபன் ஒரு மாதிரியும் எஸ்.வி.சேகர் இன்னொரு மாதிரியும் நடத்தப்படுகிறார்கள்.

ஏனெனில் திலீபன் மகேந்திரன் உடலில் பூணூல் இல்லை. எஸ.வி.சேகர் உடலில் பூணூல் உண்டு.

இந்தியாவில் பூணூல் சட்டத்தைவிட வலிமையானது.

பாலன் தோழர்