இன்று உலகம் முழுதும் கொரானா பக்க விளைவுகள்,நாடு இனம் மதம் தாண்டி சாதாரண மக்களுக்கு ஒரு எதிர்காலம் இருக்குமா என்ற கேள்விகுறியில் வந்து முடிகின்றது. இதற்கு ஒரு குட்டி கதை ஒன்றை உதாரணமாக எடுத்து கொண்டால்
இந்தியாவில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வீடு வீடாக சென்று வலுக்கட்டாயமாக ஓட்டுக்கு பணம் கொடுப்பது, பின்பு அதையே வீடியோவாக பதிவு செய்து டிவி சேனல்களில் 24 மணிநேரமும் ஓடவிடுவது, அதை தொடர்ச்சியாக பார்க்கும் மக்களின் மனதில் பொதுபுத்தியாக அதனை பதியவைப்பது இதெல்லாம் ஆளும் வர்க்கம் கையாளும் உத்திகள். சமீபத்தில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களில் இது போன்ற வசனங்களை கட்டாயமாக வைத்திருப்பார்கள்.
“காசுக்கு ஓட்டை விக்கிற நாயி, ஊழலைப் பத்திப் பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?.” இதில் கொடுமை என்னவென்றால், இவர்களே Wanted –ஆக சென்று பணம் கொடுப்பார்களாம். திரைப்படங்களில் அதற்கு மாறாக மக்களே காசுக்கு தங்கள் ஓட்டை விற்பதாக கதை கட்டி நம்ப வைப்பார்களாம். இதே பாணியில்தான் தற்போது வைரஸ் பூச்சாண்டியும் காட்டப்படுகிறது. நோய் பரவுவதற்கு காரணமே பொதுமக்கள்தான் என்கிற பழி அவர்களின் தலைமீதே சுமத்தப்படுகிறது.அதை அவர்களை நம்ப வைக்கவும் வேலை நடந்து வருகின்றது.மக்கள் நம்ப ஆரம்பித்தும்விட்டார்கள்.
செவ்வாய்க்கு செல்ல போகிறேன் என்றவர்கள்,இன்டர்நெட்டின் வேகாம் போதாது என்றவர்கள்,உலகம் இன்னும் சிறப்பானதை எதிர்பாக்கின்றது என்றவர்கள்,அணுகுண்டு ஐதரஜன் குண்டு ஏவுகணை பரிசோதனை என்று மார்தட்டியவர்கள் எல்லாம் அமைதி காக்க,சாதாரண மக்கள் மீது வந்து விழுகிறது கொரானா பழி,இன்டர்நெட்டிலிருந்து எல்லாவற்றையும் இராணுவ தேவைக்காக கண்டுபிடித்து விட்டு,அடுத்த கட்டத்துக்கு போனதும் மக்களுக்கு அவற்றை கொடுத்து உலகத்தின் டெக்னாலஜி வளர்ச்சி என்று நம்பவைத்துவிட்டு இன்று அமைதிகாக்கிறார்கள்.
வெளவாலினால் தான் கொரானா பரவுகிறது என்றார்கள்,பின்னர் 5G கோபுரங்களை அமைத்தால் வெளவால் செத்துவிடும் கொரானாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார்கள்.மக்கள் எல்லாவற்றையும் நம்பி பழகிவிட்டார்கள்,சந்தேகபட்டால் கூட அந்த சந்தேகத்தை தொடர்ந்து வைத்திருக்கும் அளவுக்கு மக்களுக்கு நேரத்தை இவர்கள் கொடுக்கவில்லை.இன்று எல்லோரையும் வீட்டுக்குள் அடைத்தைவிட்டார்கள், இனி வரும் AI உலகத்துக்கு மக்கள் தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டார்கள் போல,சாவு பயத்தை காட்டி வீட்டுக்குள் முடக்கிவிட்டு எல்லாம் வீடு தேடி வரும் என்கிறார்கள்,ஆக நீங்கள் இதுவரை விட்டை விட்டு திரிஞ்சது உங்களின் தேவைக்காக அல்ல,அவர்களின் தேவைக்காகதான். விழிப்புணர்வுதான் விடுதலைக்கு முதல்படி