மனைவிக்கு சிங்களம் எழுத தெரியாது – இனவாதி மஹிந்தவுக்கு சத்திய சோதனை

1511

•மகிந்த ராஜபக்சாவின் மனைவி சிராந்தி அம்மையாருக்கு இப்போது சிங்கள மொழி தெரியுமா?

மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி அம்மையார்; தாஜீதீன் கொலை பற்றிய விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.தனது பொறுப்பில் இருந்த வாகனங்கள் எப்படி கொலைக்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

அதுமட்டுமன்றி விசாரணை முடிவில் கையொப்பமிடுமாறு கோரியபோது அவர் தனக்கு சிங்களம் தெரியாது என்றும் கூறினார்.தனக்கு சிங்களம் தெரியாது என்று பொய் கூறுவதையிட்டு சிராந்தி அம்மையார் கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை.

அதேபோல் சிங்களம் தெரியாது என்று தன் மனைவி பொய் கூறியதையிட்டு மகிந்த ராஜபக்சவும் வெட்கப்படவில்லை.தாய் தந்தையும் இப்படியென்றால் மகன் ரோகித ராஜபக்சவோ இன்னும் ஒருபடி மேலேபோய் தாஜீதீன் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறினார்.

இப்போது கோத்தா ஜனாதிபதி. மகிந்தா பிரதமர். எனவே இனி தாஜீதீன் கொலை செய்யப்படவில்லை. அவர் தற்கொலை செய்தார் என்று கூறி கேசை மூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாவம் தாஜீதீன் குடும்பம். நல்லாட்சி அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.ஆனால் நல்லாட்சி அரசோ மீண்டும் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விட்டு அழிந்துவிட்டது.

பரவாயில்லை. மகிந்த குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் சிராந்தி அம்மையாருக்கு இனி சிங்களம் தெரிந்துவிடும் என்று நம்புவோமாக.

தோழர் பாலன்

வடகிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் சிங்களத்தை திணித்த நேரத்துக்கு சிராந்திக்கு கொஞ்சத்தை திணித்திருக்கலாம்,கவனத்தில் எடுப்பாரா கோட்டபாயா?