ஶ்ரீலங்கா பொலிஸ் நிலையம் மீது மக்கள் தாக்குதல்,ஒருவர் உயிரிழப்பு

73

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் மொறட்டுவை – லுனாவ பகுதியில் அண்மையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர்கள் இருவர் இன்று காலை 5 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தின் முன்னால் இன்று பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.