உயர உயர பறந்தாலும்…

168

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.காத்திருந்து இரையை அள்ளிச் செல்லும் கழுகுகள் கூட்டம் நிரம்பியது தான் இன்றைய தமிழ் தேசியம்…

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை அதிகமாக தனது தேவைக்குப் பயன்படுத்தும் ஒருவர் இவர் தான்.அவரைப் போன்று புகைப்படம் எடுத்து தன்னை ஒரு தலைவனாக காட்ட முற்படும் இவரின் உள்நோக்கம் என்ன…?

இது மட்டுமல்ல அதிக உணர்ச்சி அரசியல் விடுதலைப்புலிகள் சார்ந்தது பேசும் ஒருவரும் இவர்தான்.ஆனால் இதன்பின் முற்றுமுழுதான ஒரு விரோத மனப்பான்மை கொண்ட ஒரு தேசியம் பின்னால் இருக்கிறது என்பது இன்றுவரை மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் தான் இருக்கிறார்கள்….

தகுதி உள்ளவன் தரையில் இருக்கிறான் தகுதியற்றவன் கூரையில் இருக்கிறான்.2009 க்கு முன் எந்தவித பங்களிப்பும் செய்யாத ஒரு நபர் இன்று தானே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி மட்டுமல்ல தன்னை தலைவராக எத்தனித்து செயல்படுவதன் உள் நோக்கத்தின் பின்னணியை முற்று முழுதாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்…

அதிக சகோதரர்கள் கொண்ட குடும்பத்தில் பிறந்து ஒருவர் கூட மண்ணுக்கும் மக்களுக்கும் விடுதலைக்கும் பங்களிப்பு செய்ய முடியாமல் புலம் பெயர்ந்தவர்களில் இவர்களின் குடும்பம் பெரிய குடும்பம்…காலங்காலமாக அந்த மண்ணுடன் பிறந்து அந்த மக்களுக்காக போராடி உடலில் அவங்களை எல்லாம் இழந்த எத்தனையோ

உறவுகள் மண் மீதும் மக்கள் மீதும் பற்று கொண்டவர்கள் இன்று அவர்கள் அடிமையாக இருக்க வேண்டிய சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார் இந்த போலி தேசிய வாதி….

குற்றங்களை மறைப்பதில் மகா கில்லாடி 2009-க்கு முன்னும் அதன்பின்னும் அதிகமான குற்றச்சாட்டுக்கு சொந்தக்காரர் இவர்.இவர் மட்டுமல்ல இவருடன் சேர்ந்து பயணிக்கும் அதிகமானவர்கள்.அதற்கான ஆதாரங்கள் அதிகமாகவே உள்ளது அனைவரிடமும்….

புலம்பெயர்ந்த தேசத்தில் இருக்கும் எத்தனையோ உறவுகள் பிரதேச வேறுபாடில்லாமல் நிதியை தமது உழைப்பை வன்னி மண்ணுக்காக இந்தத் தருணம் வரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கான ஆதாரங்கள் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.ஆனால் இவரும் சரி இவர் சார்ந்த உறவுகளும்(சகோதரர்கள்)சரி அதிலிருந்து வேறுபட்டு.தாம் பிறந்த பிரதேசத்தை முதன்மை படுத்தும் நோக்கம் என்ன.புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்…..

நன்றாக சிந்தியுங்கள் போலித் தேசியம் தோலுரித்தக்க படவேண்டியது படாவிட்டால் படுகுழியில் தள்ளப்படுவீர்கள்.தேசியத்தை கூறி தேர்தல் அனுதாபத்தை ஏற்படுத்தி உங்களை தெருவுக்கு கொண்டு வரும் ஏற்பாடுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன கடந்த காலத்திலிருந்து….

ஒரு கேள்வி கேட்கிறேன் முடிந்தால் பதில் கூறுங்கள்.இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினர் பதவி.ரோட்டைப் போட்டேன் கோயிலை கட்டினேன் விளையாட்டு உபகரணங்களை வழங்கினேன் வாழ்வாதாரத்தை வழங்கினேன் இப்படியே அதிகமாக கூறினாலும் எதுவுமே இவரின் சொந்த நிதி இல்லை அது இருக்கட்டும் ஒரு புறம் இரண்டுமுறை ஆட்சிக்காலத்தில் குறைந்தது ஆயிரம் குடும்பங்கள் அரசின் உதவிகள் இல்லாமல் தங்களைத் தாங்களே நிர்ணயிக்கக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிந்ததா இவரால் நிச்சயமாக இல்லை என்ற பதில்தான் அனைவருக்கும் கிடைக்கும் இவருக்கு மட்டுமல்ல இப்பொழுது இருக்கும் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்….

தாங்கள் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக உதவிகளை செய்து சரியான ஒரு அரசியலை கொண்டு செல்கிறார்கள் போலித்தனமாக.மக்களும் தொடர்ச்சியாக ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்…

காலில் செருப்பில்லாமல் நடக்கும் மக்களுக்கு வீதியை போட்டுக் கொடுக்கிறார்கள்.முள்ளு குத்தி விடும் என்ற கடும்அக்கரையில்.நம்புங்கள் இவர்களை…

கல்விக்கு உபகரணம் இல்லாமல் கல்வி கற்க முடியாமல் மாணவச் செல்வங்கள் இருக்கும்பொழுது.18 வயதுக்கு மேற்பட்டு வாக்களிக்க தகுதி உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.கல்வி அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை.கல்வி அறிவு வளர்ந்தால் நீங்கள் சிந்திக்க தொடங்கி விடுவீர்கள்.கிரிக்கெட் விளையாடி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் வாக்களிப்பதற்காக.நம்புங்கள் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் கொண்டவர்கள் இவர்கள் தான் என்று..

கையெடுத்துக் கும்பிட கையில்லாத ஒரு சமூகம் இருக்கும் பொழுது.கோவில்களை கட்டி எழுப்புவது சமயம் சார்ந்த வாக்குகளுக்காக.இப்படி இவர்கள் ஒவ்வொருவரின் செயற்பாட்டிலும் முற்றுமுழுதாக மீண்டும் மீண்டும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக திட்டமிட்டு செயல்படுகிறார்கள் ஆனால் மக்கள்தான் புரிந்துகொள்ளவில்லை மிகவும் கவலையான விடயம் ஆக உள்ளது….

சாதாரண 18 வயது இளைஞன் ஒருவர் விளங்கிக் கொள்ளக் கூடிய முறையில் பதிவுகளை அவர்களுக்கு ஏற்றது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன்…

நம்பிக்கை அடுத்த தலைமுறையாவது புரிந்து கொள்ளட்டும் இந்த அரசியல் தலைமைகளை என்ற ஒரு நப்பாசை எனது எழுத்துக்கள் தொடர்கின்றன.

மக்களின் வலிகளுடன் அன்புடன் அரசியல் சாணக்கியன்…

Manikam Sinnathambi