முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய யாழ், கிளிநொச்சி மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறிதரன் அவர்களிடம் சில கேள்விகளை முன்வைக்காலம் என நினைக்கிறேன்.
தாங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு ஊடக சந்திப்பில் பலதரப்பட்ட கேள்விகளையும் கருத்துக்களையும் வெளியிட்டிருதீர்கள் அவ்வாறான கருத்துக்களில் இருந்து எனக்கு பல கேள்விகளை கேட்க தோன்றுகிறது, அதன் அடிப்படையில் உங்களிடம் சில கேள்விகளை முன்வைத்து பதிவு செய்யகின்றேன்.
முதலாவதாக நீங்கள் கட்சியின் தலைமை பதவிக்கு ஆசைப்பட்டு 2009ஆம் ஆண்டு தமிழ் அரசு கட்சியில் இணைய வில்லை என்று தெரிவித்திருந்தீர்கள், ஆனால் அன்றைய காலகட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி உங்களிடம் 2010 ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உங்களை வேட்பாளராக நிறுத்துவதாக கூறிய அடிப்படையிலேயே நீங்கள் தமிழ் அரசுக் கட்சியில் இணைந்தீர்கள் அல்லவா? ஏனெனில் 2001 – 2006 வரையான சமாதான காலப்பகுதியில் தமிழ் அரசுக் கட்சியும், ஏனைய இதர கட்சிகளும் விடுதலை புலிகளிடம் மண்டியிட்டு இருந்த காலம் அது. அப்டியானகாலப்பகுதியில் 75 கள்ள வாக்குகளை அளித்தவர் நீங்கள். ஒருவர் 75 கள்ள வாக்குகளை அளிக்கும் அளவுக்கு வெறித்தனமாக இருக்கின்றார் என்றால் அக்கட்சியின்பால் கொண்ட விசுவாசமே காரணமாக இருக்க முடியும் . அந்த வகையில் தமிழ் அரசுக் கட்சியில் அந்த காலப்பகுதியில் ஏன் நீங்கள் இணைந்து கொள்ள வில்லை?
இரண்டாவதாக நீங்கள் தமிழ்செல்வன் அண்ணன், பாலசிங்கம் அண்ணன் என்றும் உங்களுடைய விடுதலை போராட்டம் என்றும் நீண்டகாலமாக நான் கிளிநொச்சியில் வசிப்பவன் என்றும் உருக்கமாக கூறியுள்ளீர்கள். அவ்வாறாயின் விடுதலை புலிகளினது காலத்தில் உங்களது பங்களிப்பு எவ்வாறு அமைந்திருந்தது?ஏன் எனின் உங்களுடன் நெருங்கியவன் என்ற ரீதியில் இந்த கேள்வியினை தொடுக்கிறேன்.
மூன்றாவதாக கடந்த காலங்களில் இந்திய இராணுவத்தினுடன் நாங்கள் போரிட்டுக்கொண்டு இருந்த பொழுதில் பாலா அண்ணன் இராஜதந்திர ரீதியாக நகர்வுகளை மேற்கொண்டு இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தீர்கள், 1987 – 1989 இறுதி காலப்பகுதிவரை விடுதலை புலிகள் இந்திய இராணுவத்திற்கும் எதிராக போராடிகக்கொண்டு இருந்தார்கள், அந்தகாலப்பகுதியில் விடுதலை புலிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் அன்றைய ஒட்டுக் குழுக்களான, பிளொட், ரெலோ, இ.பி.ஆர்.எல்.எப்,மற்றும் இ.என்.டி. எல். எப் போன்றவை இந்திய இராணுவத்தினுடன் சேர்ந்து செயல்பட்டவை. எனவே நீங்கள் அந்த காலகட்டத்தில் எந்த அமைப்புடன் தொடர்பை பேணிவந்தீர்கள்?
நான்காவதாக நீங்கள் சுமந்திரன் மிக ஆற்றல் உள்ள புத்திஜீவி என்றும் அவரைப் போன்ற புத்திஜீவிகள் யாராவது இருந்தால் நாட்டிலோ அல்லது புலம்பெயர் தேசங்களிலோ இருந்தால் அடையாளம் காட்டுங்கள் என்று சவால் விட்டுள்ளீர்கள். சுமந்திரன் புத்திஜீவி என்பதை ஏற்றுக்கொளகிறோம் ஆனால் கடந்த காலங்களில் உங்களுடைய கட்சிக்கு தவராசா,உருத்திரகுமாரன் போன்ற சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கு அமைவாகவே உங்கள் அரசியல் நகர்வுகள் அமைந்திருந்தது. அதன் பின்னர் வந்த சுமந்திரனின் அழுத்தம் காரணமாக அப்படியானா புத்திஜீவிகளை புறம் தள்ளி விட்டு புத்திஜீவிகளை இனங்காட்டுங்கள் என்பது எந்த அடிப்படையில் நியாயமானது?
ஐந்தாவதாக புத்திஜீவிகள் எங்களுக்கு தேவை ஆனால் நாங்கள் தேடிப்போகயிலாது அது எங்களுடைய வேலையில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வாறாயின் எப்படி உங்களை தமிழ் அரசுக் கட்சி தேடிவந்து கட்சியில் இணைத்துக்கொண்டது? நீங்கள் புத்திஜீவிகளை இனங்காண மாட்டீர்கள் என்றால் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை உங்களால் எவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியும்?
ஆறாவதாக நீங்கள் தலைமை பதவிக்கு ஆசைப்படுகின்றீர்கள் என்று ஊடகங்கள் பொய்யான வதந்திகளை மேற்கொண்டு வருகின்றது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளீர்கள்? ஊடகங்களுக்கு உங்களையோ உங்களுடைய கட்சியினையோ விமர்சிக்கும் அவசியம் கிடையாது, அதற்கான தேவையும் கிடையாது. உங்கள் கட்சிக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகளும் பதவிச் சண்டைகளிலும் இருந்து எழுந்த கேள்வியையே ஊடகங்கள் உங்களிடம் வினாவியது. இருந்தபோதிலும் நீங்கள் கூறிய கருத்தில் எவ்வளவு நண்பகத்தன்மை உள்ளது என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது? நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் தலைமை பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல ஆனால் நேரமும் காலமும் கனிந்து வந்தால் அதைப்பற்றி பரிசீலனை செய்வேன் என்று கூறியுள்ளதன் உண்மையான அர்த்தம் என்ன? அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருப்பது தானே என்று ஊகிக்க தோன்றுகிறது. ஏனெனில் கடந்த காலத்தில் நீங்கள் அரசியலுக்குள் பிரசவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் கனவுடனே உட்புகுந்தீர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
ஏழாவதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் உரிமைகளை வென்றெடுக்க போராடிய தாகவும், மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொண்டதாகவும், இளம் சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுத்தாக தெரிவித்துள்ளீர்கள். இவற்றையெல்லாம் உங்களால் எந்தெந்த சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொடுக்க பட்டது அல்லது மேற்கொள்ளப்பட்டது என்று பட்டியல் இட்டுக் காட்டமுடியுமா?
எனவே நீங்கள் ஊடகங்களை விமர்சிப்பதை விட்டு விட்டு யதார்த்தமா சிந்தித்து செயல்பட முயற்சி செய்யுங்கள். இனியும் நீங்கள் புலிவேஷமும் புலிக்கோசமும் எழுப்பவேண்டாம், தற்பொழுது மக்கள் தெளிவாக உள்ளனர் என்பது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் என நம்புகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உங்கள் கோட்டை என வர்ணிக்கப்படும் வட்டக்கச்சி பிரதேசத்தில் சுயேட்சை வேட்பாளர் சந்திரகுமாரின் அலை எவ்வாறு வீசியது என்பது இதற்கோர் சான்று.
உண்மையில் நீங்கள் ஒரு யதார்த்த வேதியாக இருந்திருந்தால் இம்முறை தேர்தலி்ல் நீங்கள் ஒதுங்கி இருந்து உங்கள் பிரதேசத்தில் உள்ள புத்திஜீவிகளையோ அல்லது சமூக ஆர்வலர்களையோ வேட்பாளராக நிறுத்தியிருந்தால் மக்களால் ஏற்றுக்கொள்ளாபபட்ட ஒரு இனத்தின் அடையாளமுள்ள அரசியல்வாதியாக மதிக்கப்பட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் பதவியின் மீதும் தலைமைப்பீடத்தையும் கைப்பற்றும் கனவுடனே திரியும் உங்களிடம் இவற்றை எதிர்பாக்கமுடியாது என்பது வெளிப்படையான உண்மை. எனவே இவற்றுக்கான பதில்களை நீங்கள் கூறாவிட்டாலும் காலம் மிக விரைவில் பதில் கூறும் என நம்புகிறேன்.