சிங்கள மீனவர்கள் வல்வளைப்பில் வடக்கு,பாதிப்படையும் எம் மீனவர்கள்

92

கடந்த சில வருடங்களாக வடமராட்சி கிழக்கு தொடங்கும் முல்லைத்தீவு பேய்ப்பறைபிட்டி வரையான வடக்கு மாகாண கடற்பரப்பை பருவ காலங்களில் கடல் அட்டை பிடிப்பதற்காக சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள். அதே போல தலைமன்னார் பியர், சவுத்பார், சிலாபத்துறை என பல பிரதேசங்கள் பிரதேச தமிழ் மீனவர்களின் கட்டுப்பாட்டை மீறி பருவ காலங்களில் ஆக்கிரமித்து வருகிறார்கள்

இப்போது 2020 ஆண்டின் பருவக்காலத்திற்கு கடல் அட்டை பிடிப்பதற்கு சிங்கள மீன்வர்கள வடக்கு நோக்கி வர தொடக்கி இருக்கிறார்கள் .கடந்த சில வருடங்களாக சாலை, கொக்கிளாய்,முல்லைதீவு, வடமராட்சிக் கிழக்கின் சுண்டிக்குளம், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, மருதங்கேணி, தாளையடி என ஆக்கிரமித்து வந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இந்த ஆண்டு பருத்தித்துறை நகரில் கால்பதித்துள்ளனர். நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் வடமராட்சி கிழக்கு குடாரப்பிலும் பருத்தித்துறை கடற்பரப்பிலும் தென்னிலங்கை மீனவர்கள் கடல் அட்டை பிடிக்கும் தொழிலை ஆரம்பித்து இருக்கிறார்கள்

அதே போல வடக்கு கடலில் கடல் அட்டை பிடிக்கும் அனுமதி தென்பகுதி மீனவர்களுக்குத்தான் பெரும்பாலும் வழங்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டம் சாலை கடற்பரப்பில் 2019 ஆம் ஆண்டு மட்டும் பருவ காலத்தில் கடற்தொழில் செய்வதற்கு தென்னிலங்கையை சேர்ந்த 26 மீனவ முதலாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் கடற்தொழில் திணைக்களத்தால் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. 2018 ஆம் ஆண்டு பருவகாலத்தில் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள், 500க்கும் அதிகமான படகுகளில், வடமராட்சிக் கிழக்குக் கடலில் கடலட்டை பிடித்தனர் . கடல் அட்டையை பிடித்து மதிப்புக்கூட்டி தென்பகுதி நிறுவனங்களுக்கு ஏற்றுவது வரை தென்னிலங்கை மீனவர்களே செய்தார்கள்

ஆனால் கடற்கரையில் இருந்து 5 KM இற்கு அப்பாலான கடலில் மட்டும் தான் கடலட்டை பிடிக்க அனுமதி உண்டு.ஆனால் தென்னிலங்கை மீனவர்கள் 2 KM இற்கு உட்பட வடக்கு மாகாண கடலில் கடலட்டை பிடிக்கிறார்கள் . இந்த தென்னிலங்கை மீனவர்கள் இரவு நேரங்களில் கடலுக்கு அடியில் பெரும் ஒளியைப் பாய்ச்சக்கூடிய மின் விளக்குகளைச் செலுத்திக் கொண்டும், இலை குழைகளைக் கடலுக்குள் வகை தொகையின்றிக் கொட்டிக் கொண்டும், தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், கரையோரங்களில் வாழும் மீன்கள், ஆழ்கடலை நோக்கிச் செல்கின்றன. இனப்பெருக்கத்துக்காக ஆழம் குறைந்த கடல் பகுதியான, கரையோரங்களை நோக்கி வரும் மீன்களும் இவ்வாறான அச்சுறுத்தல்களால் கரைக்கு வருவதில்லை.

இதனால் கரையோர மீன்படி தொழில் செய்யும் பிரதேச தமிழ் மீனவர்கள் பாதிக்படுகிறார்கள். இதனால் முல்லைத்தீவில் 74 KM நீளமான கடற்பரப்பை மட்டும் நம்பி 5060 இற்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன . அதே போல வடமராட்சி கிழக்க்கு உட்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் 7000 மீனவர்கள் பாதிக்கப்பட்டனர் . இவவறு ஆக்கிரமிப்பில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் உள்ளுராட்சி நிறுவனங்களில் அனுமதிகளை பெறுவதில்லை . குறிப்பாக பெரும்பாலான சிங்கள மீனவர்களுக்கு பின்னணியில் இராணுவம் இருக்கிறது .

இதனால் அப்பாவி மீனவர்கள் குரலற்றவர்களாக இருக்கிறார்கள் . தமிழ் தேசிய அரசியல் வாதிகளும் ஊடகங்களும் அவசியம் பேச வேண்டிய அவசர விடயம் இது

நன்றி இனமொன்றின் குரல்