உலக இயங்கியலும் தமிழர் அரசியலும்..

70

#சிங்களவர்களுக்குள்ளும் #நல்லவர்கள் #இருக்கிறார்கள் #என்ற #கருத்தியல் #அடிப்படையில் #தவறானது #மாத்திரம் #அல்ல, #மோசமானதும் #கூட…..

எண்ணையை வாங்கிக்கொண்டு அதன் பெறுமதிக்கு டொலரை விடுத்து தங்கத்தை தாருங்கள் என்று கேட்டதை தவிர மும்மர் கடாபி வேறு ஒரு குற்றமும் செய்யவில்லை.

தன்னை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்பதற்காக சிலரை கொன்றும், எண்ணையை டொலரின் பெறுமதியில் விற்க முடியாது என்று சொன்னதை தவிர சதாம் உசைனில் வேறு ஒரு குற்றமும் காண முடியவில்லை.

ஆனால் அமெரிக்கா தனது நலனை நிலைநாட்டுவதற்கு அவர்களை குற்றவாளிகளாக பிரசாரம் செய்து, அதன் மூலம் அவர்களின் இருப்புக்களை அழித்து தனது சுரண்டல் வேலைகளுக்கு ஒத்திசைந்து நடக்கக்கூடியவர்களை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்திருந்தது.

உலகத்தில் உள்ள எந்த இனமும் தன் இனத்தில் உள்ளவர்களை பாராட்டிக்கொள்வதுடன் தமக்கு பயன்படுத்த முடியாத எவரையும், அவர்கள் எப்படி நல்லவர்களாக இருந்தாலும் அவர்களை பாராட்டுவதற்கு நேரத்தை செலவழிப்பதில்லை, காரணம் அந்த விடயம் ஒரு போதும் இனத்தின் மீட்சிக்கோ அல்லது நாட்டின் வளர்ச்சிக்கோ எந்த வகையிலும்

உதவப்போவதில்லை என்பதனாலேயே ஆகும்.

எம்மவர்களை, எமது இன வளர்ச்சிக்கும், மீட்சிக்கும் உழைப்பவர்களை பாராட்டிக்கொள்ள பழக்கப்படுத்திக்கொள்வதோடு, எம் இனத்திற்கு பயன் அற்றவர்களை பாராட்டிக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அடோப் கிட்லரால், இஸ்ரேலியர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட பொழுதும் சரி, இனப்படுகொலையினை இஸ்ரேலியர்கள் சர்வதேச அரங்கில் காண்பித்த பொழுதும் சரி,

இன்றும் கூட, இஸ்ரேலியர்களால் தங்களின் சந்ததிக்கு அடோப் கிட்லர் எங்கள் மக்களை இனப்படுகொலை செய்தார் என்று சொல்லிக்கொடுக்கவில்லை, மாறாக ஜேர்மனியர்கள் இஸ்ரேலியர்களை இனப்படுகொலை செய்தார்கள் என்றுதான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. அதன் கருத்து ஜேர்மனியர் என்ற இனம் தான் தங்களை இனப்படுகொலை செய்தார்களே தவிர, தனி ஒரு அடோப் கிட்லர் மட்டுமல்ல என்று நேர்த்தியாக வரலாற்றை தங்கள் பரம்பரைக்கு கடத்துகிறார்கள்.

உலகத்தின் நடைமுறையில் யதார்த்தம் என்பது சரியான ஒருவனை, தன்னுடைய நலனுக்காக பிழையானவனாக சித்தரித்து அழித்தொழிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்த கொடுமைக்கு எமது விடுதலைப்போராட்டமும், தலைமையும் விதிவிலக்காக இருக்கவில்லை.

நாங்கள் எமது அடுத்த பரம்பரைக்கு தெளிவாக கடத்த வேண்டிய செய்தி இதுதான்…..

எமது விடுதலைக்கு போராடிய அமைப்பையும், தலைமையையும் இல்லாமல் செய்தது மட்டுமல்ல, 20 நாடுகளுடன் சேர்ந்து சிங்களவர்கள் எமது மக்களையும் இனப்படுகொலை செய்தார்கள்.

1956 ல் இங்கினியாகலையில் இருந்து 2009 முள்ளிவாய்க்கால் வரையும் நீங்கள் சொல்லும் சிங்களவர்களில் சிலர் நல்லவர்கள் என்று சொல்பவர்களால் என்ன செய்ய முடிந்தது. அந்த ஒரு சிலரால் தமிழருக்காக அனுதாபப்பட முடிந்ததே தவிர, வேறு ஒன்றையும் செய்ய முடியவில்லை, எந்த காலமும் நல்லவன் ஆட்சிக்கு வரப்போவதுமில்லை, அது நீடிக்க போவதுமில்லை, மாறாக சிங்கள இனவெறியினை கக்குகின்றவர்களே ஆட்சிக்கு வந்து கொண்டிருப்பார்கள், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நாங்கள் சிங்களவர்களில் சிலர் நல்லவர்கள் என்ற கருத்தியலை கொண்டு செல்வது எங்களை அழிப்பதற்கு துணை போகுமே தவிர, எங்களை மீட்டெடுக்க ஒரு போதும் உதவப்போவதில்லை.

தேசியத்தலைவரின் சிந்தனைப்படி, “எமது மக்களை மற்றவர்கள் அனுதாபத்துக்குரியவர்களாக பார்ப்பதை நான் விரும்பவில்லை, ஏனெனில் இந்த நிலை எங்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை ஒரு போதும் கொண்டு வரப்போவதில்லை”

இதன் கருத்து சிங்களவர்களுக்குள் இருக்கும் சில நல்லவர்களால் எங்களை அனுதாபத்துக்குரியவர்களாக பார்க்க முடியுமே தவிர, அவர்களால் எங்களுக்கு எந்த விமோசனமும் நிகழ்ந்துவிட போவதில்லை.

நிற்க,

எமது வருங்கால சந்ததிக்கு செய்தியினை தெளிவாக கொடுப்போம். 20 மேற்பட்ட நாடுகளை தன் வசம் வளைத்துக்கொண்டு சிங்கள இனம் எமது போராட்டத்தையும் தலைமையையும் இல்லாமல் செய்தது மட்டுமல்ல, எமது மக்களையும் இனப்படுகொலை செய்தார்கள் என்பதுடன் எங்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

நன்றி

மைக்கல் பிரான்சிஸ்