சிங்கள இனவாத தீயில் சிறிலங்கா சிறுபான்மையினர்!

296

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ள இறுதிநபர் வரை அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதில் பின்நிற்கப் போவதில்லை என்று நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு,ஏப்ரல் சிறிலங்கா குண்டு வெடிப்பிப் பின்னர்,அதனை உலக தீவிரவாத அமைப்பான ஐஎஸ் உள்ளூர் முஸ்லீம்கள் உதவியுடன் மேற்கொண்டதாக,தெரிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் தொடர்ந்த விசாரணைகளில் நூற்றுகணக்கான முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த ஆட்சி தோல்வியும்,ஏற்கனவே குடம்ப ஆட்சி என்று நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச கும்பலிடம் சிங்கள மக்கள் தாமாக முன்வந்து சரணடைந்தமையும்,வன்னி இனப்படுகொலை படங்கள் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை என்ற போலி பரப்புரைகளை இதுவரை நம்பிகொண்டிருந்த சிங்களத்திற்கு,குண்டு வெடிப்புகள் உயிர் சேதங்கள் மிகுந்த பயத்தை கொடுத்து,புலிகள் போர்காலத்திலேயே நடக்காதவை எல்லாம் இப்போது ஏன் நடக்கின்றன என்ற கேள்விகளுக்கு பதிலில்லாமல்,உச்சகட்ட உயிர் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற,மகிந்த குடும்பத்தின் காலடியில் சிங்களவர்கள் தாங்களாக போய் விழுந்தனர்.

எதிர்பார்த்து காத்திருந்த,மகிந்த குடும்பம்,குண்டு வெடித்த அடுத்த நாளே தனது அரசியல் காய்களை நகர்த்த தொடங்கியது.கோட்டாபாய தானாக முன்வந்து மக்களை நாட்டை காக்க அரசியல் குதிக்கிறேன் என்று அறிக்கைவிட்டார்.அப்படியே தேர்தலில் நின்று ஜனாதிபதியும் ஆகிவிட்டார்.அத்துடன் இனி இவற்றை வைத்து தமது அடுத்தகட்ட அரசியலை நகர்த்த ஆயத்தமாகின்றனர்.சிறுபான்மை சார்ந்து அபிவிருத்தி கோசம் போட்டு சிங்கள இனவாத அரசுடன் சேர்ந்து இயங்கியவர்களும் புறக்கணிக்கபடுகிறார்கள்,தனி சிங்க இனவாத தேசியத்தை தட்டியெழுப்பி,பலப்படுத்தி தமது அரணாக வைத்து கொண்டு,சிறுபான்மையினரை முழுதாக ஏப்பம் விடுவதே இவர்களின் அடிப்படை திட்டம்.இங்கு ஒரே ஒரு வித்தியாசம்தான்,சிறுபான்மையினர் தெரிந்தே ஏமாறுகிறார்கள்.ஆனால் அப்பாவி சிங்களவர்கள் தெரியாமல் ஏமாறுகிறார்கள்.எல்லாம் முடிந்து ஏப்பம் விட்டபின்னர்,எரிக்க எதுவும் கிடைக்காதல் இனவாத நெருப்பு தன்னை தானே எரித்து கொள்ளும்.திண்ணம்!