வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் அல்ல. இதுவும் பௌத்த சிங்களவர்களின் பூமிதான். அதாவது ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த சிங்கள நாடு. தமிழர்கள் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்துப் புலம்பிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை .” என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
“வடக்கு, கிழக்கை நாம் பாதுகாக்க வேண்டுமெனில் இங்கு இராணுவத்தைத்தான் நிலைநிறுத்த வேண்டும். அவர்களின் நேரடிக் கண்காணிப்பில்தான் அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெறும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியை நாம் வரவேற்கின்றோம். பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களின் வாக்குகளினாலேயே அவர் நாட்டின் தலைவாராகத் தெரிவுசெய்யப்பட்டார். இந்தநிலையில் அவரின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.
ஜனாதிபதித் தேர்தலில் தனிப் பௌத்த சிங்களத் தலைவரை நாம் தெரிவு செய்தது போல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் தனிப் பௌத்த சிங்கள பெரும்பான்மை அரசை நாம் நிறுவுவோம். எனவே, தமிழர்கள் விரும்பினால் எமது கொள்கைகளை ஏற்று எம்முடன் இணைந்து பயணிக்கலாம்” என்றார்.
அப்பறம்
இங்கே இருந்து கொண்டே அமெரிக்காவுக்கு துடிக்கிற இந்த பெண் தூங்கிட்டு இருக்கும்.சிங்களவர்கள் மகாவம்ச மனநிலையில் இருந்து ஒருநாளும் வெளியில் வரபோவதில்லை
நல்லிணக்கம் பேசுவோர்,சிங்களவர்களுடன் இணைந்து செல்வோம் என்போர்,இன்னும் இனவிடுதலை போரில் பிழை கண்டுபிடிப்போர்,இலக்கியவாதிகள்,இன்டலக்சுவல்ஸ்,எல்லாருக்கும் கேட்டிச்சா? கூடவே தலைவர் பிரபாகரன் பல வருடங்கள் முன்னதாக கணித்தது.நோட் பண்ணி வைத்து கொள்ளுங்கள் ஈன தமிழர்களே…
சிங்களவர்களில் படித்தவர் முதல் பாமரன் வரை தமிழர் இனபிரச்சினையை ஒரே கோணத்தில்தான் அணுகுவார்கள்,சிங்கள மக்களிடத்திலும் அவர்கள் அரசிலும் மாற்றம் வரும் என்றும் நான் ஒரு போதும் நினைக்கவில்லை,அப்படி நினைத்தால் அது நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாகவே முடியும் – தலைவர் பிரபாகரன்