சிரிப்பின் மொழி

368

வெற்றியில் சிரிப்பவன் வீரன்.
கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

மகிமையில் சிரிப்பவன் மன்னன்.
விளையாமல் சிரிப்பவன் வீணன்.
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.

ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.
நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.
கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.
தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.
குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.
நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.
தற்பெருமையில் சிரிப்பவன் கோழை
சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்.

நிலை மறந்து சிரிப்பவள் காதலி.
காதலால் சிரிப்பவள் மனைவி.
அன்பால் சிரிப்பவள் அன்னை.

சிரிப்பு என்பது மனம் சம்பந்தபட்டதாகும்.
மனம் என்பது ஒரு விசுவாசமான சிறந்த வேலைக்காரன் என்றும் மோசமான எஜமானன் என்றும் சொல்வார்கள்.

எனவே சிரிப்பின் போது மிகக் கவனமாக இருக்கவேண்டும். விசயம் தெரிந்தவர்கள் சிரிப்பை வைத்தே எடைபோட்டுவிடுவார்கள்.

Sajee.k