கரும்புலிகள் நாள் ஏற்பாடு?சிவாஜிலிங்கம் சிறிலங்கா இராணுவத்தால் கைது,பின்னர் பிணை

58

இந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...

View Results

Loading ... Loading ...

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸ் இராணுவத்தினால் இன்று அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றப் பிடியாணை உத்தரவிலேயே சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் பொலிஸார் அது தொடர்பான முழுமையான விபரத்தை வெளியிடவில்லை

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம்..

இன்று காலை தனது வீட்டிற்கு வந்த பொரிஸார் காரணமின்றி தன்னை கைது செய்துள்ளதாகவும், இன்றைய தினம் கரும்புலி தினம் என்பதாலேயே தன்னைக் கைது செய்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் கரும்புலி தினத்திற்குரிய ஏற்பாடுகளை தான் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வல்வெட்டித்துறையில் அதிகளவிலான அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன்,சோதனை முயற்சிகளும் நடைபெறுவதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.