அமெரிக்காவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்,சிறிலங்காவில் அடி..உதை..கைது..

55

நீதிமன்ற உத்தரவையும் மீறி அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற முன்னணி சோசலிசக் கட்சி உறுப்பினர்கள் பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளோயிட், அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (09) பிற்பகல் ஒரு மணியளவில் கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த முன்னணி சோசலிசக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

நீதிமன்ற உத்தரவு மற்றும் கொரோனா அச்சுறுத்தலால் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய காரணங்களுக்காகவே இவர்கள் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பிரஜையான கோட்டபாஜவுக்கு அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தொடர்ந்து தடை விதித்தே வருகின்றார்.தவிர அமெரிக்க தொடர்பான சிங்களவர்கள் வரைந்த சில சுவரோவியங்களும் முன்னதாக அரசின் பணிப்பில் அழிக்கப்பட்டிருந்தது.நிச்சயமாக பலகோடி ஊழல்,போர்க்குற்றங்களை சுமந்துள்ள ராஜபக்ச குடும்பம் உலக வல்லரசுகளில் எதாவது ஒன்றுக்கு விலைபோயிருப்பார்கள்.