முகக்கவசங்கள் அணியாமல் வீதிகளில் நடமாடுபவர்கள், உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக சிறிலங்கா பொலிஸார் கடுமையான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
சிறிலங்காவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெருக்கெடுக்க தொடங்கியுள்ளதை அடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் பொலிஸார் பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.கொரானா தொடர்பாக கோட்டபாய அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில்,தேர்தல் அரசியல் காரணமாக அவரசரமாக தளர்த்தப்பட்ட பொதுமுடக்கம்,மக்களை மேலும் ஆபத்தில் தள்ளியுள்ளதுடன்,இராணுவ காவல்துறைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லை தாண்டிய அதிகாரங்கள் மூலம்,சிறிலங்காவில் மக்களுக்கு எதிரான இராணுவ ஆட்சி ஒன்று கட்டமைக்கப்பட்டு வருகின்றது உறுதியாகின்றது.