நெருங்குகிறது தேர்தல்,தளர்கிறது சிறிலங்காவின் ஊரடங்கு சட்டம்,கொரானா பரவும் சாத்தியம்

43

வார இறுதியில் சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்கு சட்டம் இல்லை!

இந்த வார இறுதி சனி,ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரைக் காலமும் சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டது.

இருப்பினும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் மேற்படி முடிவை அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 04 மற்றும் 05ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட நிலையில் சிறிலங்கா பாராளுமன்ற தேர்தல்கள் அவசர கதியில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடதக்கது.