ராஜபக்சே நிருவாகத்தின் தொடர்ச்சியான தடுமாற்றங்களால் சிறிலங்கா பொது மற்றும் வெளிநாட்டு கடன் முகாமைத்துவதில் கடுமையான சவால்களை எதிர் கொள்ள தொடக்கி இருக்கிறது. அந்த வகையில் சர்வதேச Fitch Ratings நிறுவனம் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு மற்றும் உள்ளூர் Currency Issuer Default Ratings (IDR) ஐ ‘B-‘, ஆக மதிப்பீடு செய்து இருக்கிறது (The Outlook is Negative)
மறுபுறம் வரையறுக்கப்பட்ட USD7.2 billion பெறுமதியான வெளிநாட்டு நாணய இருப்புக்களை மட்டும் கொண்டு இருக்கும் இலங்கை அரசாங்கம் அடுத்து வரும் மார்கழி மாத முடிவிற்குள் USD 3.2 billion பெறுமதியான கடன்களை மீள செலுத்த வேண்டி இருக்கிறது .அதில் USD 1.0 billion பெறுமதியான international sovereign bond மீதான கொடுப்பனவுகள் வரும் October மாதம் செலுத்த பட வேண்டும் இது மட்டுமின்றி ஏறத்தாழ USD 13.8 billion பெறுமதியான கடன்கள் 2021-2023 காலப்பகுதியில் மீள செலுத்த பட வேண்டி இருக்கிறது .
உண்மையில் இலங்கை அரசாங்கம் தனது வருமானத்தின் சுமார் 65% வீதத்தை கடனுக்கான வட்டி வீதமாக செலுத்த வேண்டிய அபாயகரமான சூழலில் சிக்கி கொண்டு இருக்கிறது . அதுமட்டுமின்றி இலங்கை அரசாங்கத்தின் வருமானத்தின் 690% மடங்காக இலங்கை அரசாங்கதின் கடன் நிலுவையை கொண்டு இருக்கிறது. அதே போல இந்த ஆண்டில் மொத்த பொது அரசாங்க கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 94% ஆக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது அடுத்த ஆண்டு 96% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அத்தோடு இலங்கையின் வரவு செலவு திட்ட பற்றாக்குறை இந்த ஆண்டு 9.3 % ஆக இருக்கும் என சொல்லுகிறார்கள் .
நெருக்கடிகளை எதிர்கொள்ளுவதற்காக ராஜபக்சே நிருவாகம் தொடர்ச்சியாக நாணயங்களை புதிதாக அச்சிட்டு வருகிறார்கள் . கடந்த வாரம் மட்டும் 7.8 billion பெறுமதியான நாணயங்களை அச்சிட்டு இருக்கிறார்கள் .கடந்த மார்ச் மாதம் தொடக்கம் 213 billion பெறுமதியான நாணயங்களை அச்சிட்டு இருக்கிறார்கள்.
பல கட்டங்களாக நடைபெற்ற ஈழபோரில் தமிழர் தரப்பு,சிங்கள அரசுக்கு போரின் பின்விளைவுகளை பற்றி எச்சரிக்க தவறவில்லை,அனைத்துலகத்திடமிருந்து வாங்கப்பட்ட கடன்கள் எல்லாம் சேர்ந்தே இன்று இலங்கையை மூழ்கடித்து கொண்டிருக்கின்றன.தமிழர் தரப்பு கேட்டவாறே சிங்கள அரசு ஒத்து கொண்டிருந்தால் இன்று இருநாடுகள் ஒன்றுகொன்று அமைதியாக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்திருக்கும்.எதனையும் தொலைநோக்காக சிந்தித்து பார்க்காமல் எதேச்சதிகார சிங்கள அரசின் போக்கால், இன்று சிங்கள மக்கள் அழிவின் விளிம்பில்
– shaila