ஆட்சிக்கு வந்த நான்கு மாதத்தில் 841 பில்லியன் கடன் பெற்ற ராஜபக்ச கும்பல்,

89

ராஜபக்சே நிருவாகம் கடந்த 4 மாதத்தில் மட்டும் (ஜனவரி 2020-ஏப்ரல் 2020) Rs. 841 billion பெறுமதியான கடன் பெற்று இருக்கிறார்கள் .

  1. இலங்கை அபிவிருத்தி முறிகள் மூலமான கடன் : Rs. 42.5 billion
  2. சீனா அபிவிருத்தி வங்கி மூலமான கடன் :Rs. 96.4 billion
  3. திறைசேரி பிணைகள் மற்றும் முறிகள் மூலமான கடன் : Rs. 702.3 billion

ஜனவரி 2020-ஏப்ரல் 2020 காலப்பகுதியில் Rs 720 billion பெறுமதியான கடனை மட்டும் பெறுவதற்கு இலங்கை பாராளமன்றம் கடந்த ஆண்டு (2019) October மாதம் அனுமதி வழங்கி இருந்தது ஆனால் ராஜபக்சே நிருவாகம் பாராளமன்ற அனுமதிக்கு மேலதிகமாக கடந்த 4 மாதத்தில் மட்டும் Rs 120 billion (12 ஆயிரம் கோடி ) பெறுமதியான கடன் பெற்று இருக்கிறார்கள் .

பொது நிதி மீதான அதிகாரம் பாராளமன்றத்திடம் உள்ள போது பாராளமன்றம் தீர்மானித்த கடன் அளவை விட அதிகம் கடன் பெறுவது சட்டவிரோதனமானது . சர்வதேச நிதி சந்தை மதிப்பீட்டாளர்கள் , உலகவங்கி , The Economist போன்ற உலக புகழ்பெற்ற சஞ்சிகைகள் உட்பட்ட பலரும் இலங்கையின் நிதி நிர்வாகம் பற்றி எச்சரித்து வருகின்ற போதும் இலங்கையின் எதிர்காலம் குறித்து எந்த அக்கறையும் இன்றி ராஜபக்சே நிருவாகம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது

ராஜபக்சே குடும்பம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல . கொலை, கொள்ளை ,கடத்தல், ஊழல் என கடந்த காலங்களில் அவர்கள் சம்பந்தப்படாத சட்டவிரோத செயல்கள் இல்லை

ஆனால் அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பம் செய்யும் சட்டவிரோத செயல்களுக்கு ஒட்டு மொத்த அப்பாவி மக்களும் விலை பேசப்படுவது துயரமானது

– shaila