சிறிலங்காவில் கொரானா தடுப்பு விசேட செயலணியில் அதிகளவுக்கு இராணுவ சர்வதிகாரத்துடன் செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.நாட்டில் கொரானா அவசரகாலநிலை பிரகடனபடுத்தப்பட்டு அதன் பொறுப்பு பாதுகாப்பு செயலாளரும் போர் குற்றவாளியுமான கமால் குணரத்னவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து நாட்டின் சகல கொரானா தொடர்பான நடவடிக்கைகளும் இராணுவத்தினால் கண்காணிக்கப்படுவதுடன் விசேட புலனாய்துறை ஒன்றும் ஈடுபடுத்தபட்டுள்ளது.கொரானா நோய் தொற்றை விடுதலை புலிகளுடன் ஒப்பிட்டு பேசிய சிங்க இனவாத அரசியல்வாதி ஹெகலிய ரம்புக்வல,புலிகளை போரில் வெற்றி கொண்ட சிங்கள படையினருக்கு கொரானாவை வெற்றி கொள்வது என்பது பெரிய விடயமல்ல என்று கருத்து தெரிவித்திருந்தார்.இதன் மூலம் இனவாத சிங்கள அரசு தனக்கு ஏற்படும் நெருக்கடிக்களுக்கு தீர்வாகவும் சரி சிங்கள படையினரை,மக்களை ஒன்றிணைக்கவும்,உற்சாகப்படுத்தவும் அதர்ம வழியில் நரிதனமாக துரோகதனத்துடன் வென்ற போர் வெற்றியை பயன்படுத்துவது அப்பட்டமாக தெரிகின்றது.
தவிர,ஒழுக்கமுள்ள இராணுவ கட்டுபாடுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்புவேன் சிங்கள போர்குற்றவாளி ஜனாதிபதி கோட்டபாயவின் தேர்தல் வாசகமும்,அவருக்கு விழுந்த வெற்றி தேர்தல் வோட்டுக்களும் இராணுவ தீர்வில் சிங்களமக்களும் சிங்கள அதிகார அரசும் தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளமை தெரிகின்றது.இவையனைத்தும் சிறிலங்காவை முற்று முழுதான இராணுவ ரீதியான ஒரு ஆட்சிக்கு வழிவகுத்து செல்கின்றது,இராணுவ ஆட்சிக்கு உலகில் உள்ள நட்புநாடுகள் யார்? எதிரி நாடுகள் யார் என்ற பிரக்ஞையை தமிழர் தரப்பான நாம் கொண்டிருப்பதே எமக்கு தேவையான முதல் படியாகும்.பின்னர் எதிரியின் நண்பர்களின் பலம்,எமது பலம்,என்பவற்றை அறிந்து காய் நகர்த்துவதன் மூலமே தமிழர்களுக்கான தாயகம் குறித்துமேற்கொண்டு நகரமுடியும்.
– காஸ்ரோ