யாழில் முகநூலில் பரப்பப்பட்ட போலியான தகவலினால், குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!

159

யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த இராசதீபன் (29) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தையாரான இந்த நபருக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, போலி முகநூல் கணக்கில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏற்பட்ட மனவிரக்தியில் இந்த தற்கொலை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று(19) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முகபுத்தகம் என்பதன் வளர்ச்சியும் மக்கள் சமூக வலைதளங்களில் காட்டும் அதிக ஆர்வம் காரணமாக,சமூக வலைதளங்கள் தனிநபர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக தனிநபர்களினால் பயன்படுத்தபட்டு வருகின்றது.ஆகவே முடிந்தவரை மக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பயன்படுத்தாமல் பொழுதுபோக்கு சாதனமாக சமூகவலைதளத்தை அளவாக பயன்படுத்தி கொள்ளும் போது இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்த்து கொள்ளலாம்,தவிர சமூக வலைதளங்களில் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யும் சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டு உரிய தண்டனையளிக்கப்படவேண்டும் – Editor