மருத்துவ நிபுணர் சரவணபவாக்கு அன்பே சிவம் விருது!

84

யாழ் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் முதன் முறையாக முக்குழந்தைகளின் பிரசவம் மகப்பேற்று மருத்துவ நிபுணர் நமசிவாயம் சரவணபவா அவர்களால் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தனது மருத்துவ சேவையினை, தனியார் வைத்தியசாலைகளில் பணம் பெற்று செய்யாது முற்றிலும் இலவசமாக அரச வைத்தியசாலையில் மாத்திரமே வழங்கிவரும் மருத்துவ நிபுணர் நமசிவாயம் சரவணபவா அவர்களை அகில இலங்கை சைவ மகா சபையினர் அன்பே சிவம் விருதினை வழங்கி கௌரவித்துள்ளனர். .